பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நடிகர் விக்ரம் கோகலே மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 26 NOV 2022 6:14PM by PIB Chennai

நடிகர் விக்ரம் கோகலே மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

டிவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“விக்ரம் கோகலே அவர்கள் படைப்பாற்றல் கொண்ட பன்முக நடிகர். அவரது நீண்ட கால நடிப்பு பயணத்தில் அவர் நடித்த பல சுவாரஸ்யமான பாத்திரங்களுக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.”

**************

PKV / SRI  / DL


(Release ID: 1879148) Visitor Counter : 150