பிரதமர் அலுவலகம்

அருணாச்சலப்பிரதேசம் மற்றும்உத்தரப்பிரதேசத்திற்கு பிரதமர் நவம்பர் 19-ஆம் தேதி செல்கிறார்

வடகிழக்கு பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக அருணாச்சலப்பிரதேசத்தின் இட்டாநகரில் முதலாவது பசுமை விமான நிலையமான டோன்யி போலோ விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைக்க உள்ளார்
அருணாச்சலப் பிரதேசத்தில் பழங்காலத்திலிருந்து பக்தியுடன் வணங்கும் சூரியன் (டோன்யி) சந்திரன் (போலோ) ஆகியவற்றை விமானநிலையத்தின் பெயர் பிரதிபலிக்கிறது
640 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள விமான நிலையம் அப்பகுதியில் போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை வளர்ச்சியடைச் செய்யும்
8450 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்டுள்ள 600 மெகாவாட் காமெங் நீர்மின் நிலையத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
இத்திட்டத்தின் மூலம் அருணாச்சலப்பிரதேசத்திற்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும்
வாரணாசியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு மாத காலம் நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தை பிரதமர் தொடங்கிவைக்க உள்ளார்
இந்நிகழ்ச்சி ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வை பிரதிபலிக்கிறது
தமிழ்நாடு மற்றும் காசிக்கு இடையேயான பழமையான தொடர்பை மீண்டும் கண்டறிந்து உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டு இது கொண்டாடப்படுக

Posted On: 17 NOV 2022 3:30PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி அருணாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு நவம்பர் 19, 2022 அன்று செல்கிறார். இட்டா நகரில் காலை 9.30 மணியளவில் டோன்யி போலோ  விமான நிலையத்தை திறந்துவைக்க உள்ளார். 600 மெகாவாட் காமெங் நீர் மின் நிலையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். அதன் பிறகு உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி செல்லும் அவர், பிற்பகல் 2 மணியளவில் காசி தமிழ்சங்கமத்தை தொடங்கிவைக்க உள்ளார்.

அருணாச்சலப்பிரதேசத்தில் பிரதமர்

 வடகிழக்கு பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்தும் முக்கிய  நடவடிக்கையாக அருணாச்சலப்பிரதேசத்தின் இட்டாநகரில் முதலாவது பசுமை விமான நிலையமான டோன்யி போலோ விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில் பழங்காலத்திலிருந்து

பக்தியுடன் வணங்கும் சூரியன் (டோன்யி) சந்திரன் (போலோ) ஆகியவற்றை விமானநிலையத்தின் பெயர் பிரதிபலிக்கிறது.

அருணாச்சலப்பிரதேசத்தின் முதலாவது பசுமை விமான நிலையமான இது, 640 கோடி ரூபாய்க்கும் அதிக செலவில் மேற்பட்ட செலவில் 690 ஏக்கருக்கும் அதிக பரப்பளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. 2300 மீட்டர் நீள ஓடுபாதையுடன் அனைத்து பருவநிலை சூழல்களிலும்  விமான நிலையம் இயங்க முடியும். நவீன கட்டிடத்துடன் அமைக்கப்பட்டுள்ள விமான நிலைய முனையம் எரிசக்தி திறன், புதுப்பிக்கவல்ல எரிசக்தி, வளங்களை மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றை மேம்படுத்தும்.

இட்டா நகரில் மேம்படுத்தப்பட்டுள்ள புதிய விமான நிலையம் அப்பகுதியில் போக்குவரத்தை வளர்ச்சியடைய செய்வதோடு மட்டுமல்லாமல் வர்த்தக மற்றும் சுற்றுலாவையும் வளர்ச்சியடைய செய்யும். இதனால் அப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி ஊக்கமடையும்.

இந்நிகழ்ச்சியின் போது 600 மெகாவாட் காமெங் நீர்மின் நிலையத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். அருணாச்சலப்பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் 80 கி.மீ. சுற்றளவில் 8450 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் அம்மாநிலத்திற்கு கூடுதல் மின்சாரத்தை அளிக்கும்.  பசுமை எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நாட்டின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கு இத்திட்டம் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும்.

வாரணாசியில் பிரதமர்

பிரதமரின் தொலைநோக்கு வழிகாட்டுதலின்படி, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற சிந்தனையை மேம்படுத்துவது அரசு கவனம் செலுத்தும் முக்கிய பகுதிகளில் ஒன்றாகவுள்ளது. இந்த தொலைநோக்கைப் பிரதிபலிக்கும் மற்றொரு முயற்சியாக, காசியில் (வாரணாசி) ஒரு மாத காலம் நடைபெறும் ‘காசி தமிழ் சங்கமம்’, நவம்பர் 19 ஆம் நாள் பிரதமரால் தொடங்கி வைக்கப்படும்.

நாட்டின் மிக முக்கிய மற்றும் பழமையான இரண்டு கற்றல் இடங்களான தமிழ்நாடு மற்றும் காசிக்கு இடையேயான பழமையான தொடர்பை மீண்டும் கண்டறிந்து உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் இது கொண்டாடப்படுகிறது.ரண்டு பகுதிகளில் இருந்தும் அறிஞர்கள், மாணவர்கள், தத்துவஞானிகள், வணிகர்கள், கைவினைஞர்கள், கலைஞர்கள் போன்ற அனைத்துதரப்பினரும் ஒருங்கிணைந்து, அவர்களுடைய அறிவு, கலாச்சாரம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், இரு தரப்பினரும் அனுபவங்களை கற்றுக்கொள்வதற்கும், வாய்ப்பு அளிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 2500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் காசிக்கு செல்லவுள்ளனர். அவர்கள் கருத்தரங்குகளில் பங்கேற்கின்றனர். மேலும் தொடர்புடைய இடங்களுக்கு நேரடியாக சென்று உள்ளூர் மக்களின் வர்த்தகம், தொழில் ஆர்வம் குறித்து உரையாடவுள்ளனர். இரண்டு பகுதிகளைச் சேர்ந்த கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஒரு மாவட்டம் ஒரு பொருள் என்ற திட்டத்தின் பொருட்கள், புத்தகங்கள், ஆவண படங்கள், சமையல், கலைப் பொருட்கள், வரலாறு, சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவை ஒரு மாத காலத்திற்கு காசியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

 சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவை  இணைந்து இக்கலாச்சார நிகழ்ச்சியை ஒரு மாத காலத்திற்கு நடத்துகின்றன.

**************

(Release ID: 1876778)

SMB/IR/AG/KRS

 



(Release ID: 1876845) Visitor Counter : 206