பிரதமர் அலுவலகம்

அயோத்தி ஸ்ரீராம் கதா பூங்காவில் ஸ்ரீராமருக்கு நடைபெற்ற ராஜ்யாபிஷேகத்தின் போது பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 23 OCT 2022 7:50PM by PIB Chennai

ஜெய் சியா ராம்!

ஜெய் ஜெய் சியா ராம்!

 உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் பட்டேல் அவர்களே, முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, துறவிகளே, அறிஞர் பெருமக்களே, பக்தர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, அனைவருக்கும் வணக்கம்.

ராம்லாலாவின் தரிசனமும், அவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யும் பாக்கியமும் ராமரின் ஆசிர்வாதம் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். ராமர் காட்டிய பாதை அவரது பட்டாபிஷேகத்தின் மூலம் மேலும் பிரகாசமடைந்துள்ளது.  அயோத்தியின் ஒவ்வொரு அணுவிலும் அவரது தத்துவம் பொதிந்துள்ளது. இன்று ராம்லீலா, சரயு, ஆரத்தி, தீப உற்சவம் ஆகியவற்றின் மூலம் உலகம் முழுவதும் இந்த தத்துவம் பரப்பப்பட்டு வருகிறது.  இந்த தருணத்தில் உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.  பகவான் ஸ்ரீராமர் பிறந்த புனிதமான இடத்தில் இன்று சிறிய தீபாவளியும், நாளை தீபாவளியும் கொண்டாடப்படுகிறது.

நண்பர்களே,

 இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுற்று, சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை கொண்டாடும் வேளையில் தீபாவளி வந்துள்ளது. இந்த சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் பகவான் ஸ்ரீ ராமரின் கொள்கைகள் நாட்டை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும். அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையை பெறுவோம், அனைவரும் முயற்சிப்போம் என்ற கொள்கைகளை ராமரின் ஆட்சி மற்றும் நிர்வாகம் தொடர்பான போதனைகள் மற்றும் சிந்தனைகளில் நாம் காண முடியும். பகவான் ஸ்ரீ ராமரின் கொள்கைகள் வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு கலங்கரை விளக்கம். இது மிகக் கடினமான இலக்குகளை அடைய உதவுகிறது.

செங்கோட்டையில் சுதந்திரதின உரையின்போது நான் ஐந்து உறுதிமொழிகளை பிரகடனப்படுத்தினேன். இந்த ஐந்து உறுதிமொழிகளும் அனைவரின் கடமை உணர்வுடன் தொடர்புடையது.

ஐந்து உறுதிமொழிகள், நம் பாரம்பரியத்தை மீட்டெடுப்பது மற்றும் அடிமை மனோபாவத்தை நீக்குவதாகும். தாயையும், தாய் நாட்டையும் சொர்க்கத்தையும் விட மேலாக நினைப்பதற்கு பகவான் ஸ்ரீ ராமர் நமக்கு வழிகாட்டியுள்ளார். ராமர் கோயில், காசி விஸ்வநாதர் ஆலயம், கேதார்நாத் மற்றும் மகாகல் லோகா ஆகிய இடங்கள் இதற்கு சான்றாகும். இந்திய நாட்டின் பெருமைகளாக விளங்கும் வழிபாட்டுத் தலங்களை நமது அரசு புதுப்பித்துள்ளது.

  இந்தியாவை உச்சத்துக்கு கொண்டு செல்வது நம் அனைவரின் கடமையாகும்.  புதிய இந்தியா குறித்த நமது கனவு மெய்ப்படவேண்டும். இந்த விருப்பத்துடன் நான் என் உரையை நிறைவு செய்கிறேன்.  நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். நன்றி.

 

**************

MSV/PKV/AG/IDS



(Release ID: 1871462) Visitor Counter : 100