பிரதமர் அலுவலகம்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2-வது காணொலி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் தொடக்க உரை

Posted On: 21 MAR 2022 1:54PM by PIB Chennai

எனது அருமை நண்பர் ஸ்காட் அவர்களே, வணக்கம்!

ஹோலி பண்டிகை மற்றும் தேர்தல் வெற்றிக்காக எனக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி.

குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உயிரிழப்பு மற்றும் சொத்துக்கள் சேதம் ஏற்பட்டதற்கு இந்தியர்கள் அனைவரின் சார்பில் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த காணொலி மாநாட்டின்போது, நமது நல்லுறவை விரிவான பாதுகாப்பு ஒத்துழைப்பு அளவுக்கு நாம் உயர்த்தியுள்ளோம். இன்று, இரு நாடுகளுக்கும் இடையே வருடாந்திர மாநாட்டை நடத்துவதற்கான வழிமுறையை உருவாக்கியதற்காக நான் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். இது நமது நல்லுறவை வழக்கமான முறையில் மறுஆய்வு செய்வதற்கு அமைப்புரீதியான கட்டமைப்பை ஏற்படுத்தும்.

பிரதமர் அவர்களே,

நமது விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, நீங்கள் கூறியதுபோன்று, மிகவும் குறுகிய காலத்தில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள விவகாரங்களுக்கும் விரைவில் தீர்வுகாணப்படும் என்று நான் நம்புகிறேன். நமது பொருளாதார நல்லுறவு, பொருளாதார மீட்பு மற்றும் பொருளாதார பாதுகாப்பு விவகாரங்களுக்கு விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டியது மிகவும் முக்கியமானது.

பிரதமர் அவர்களே,

பழமையான இந்திய கலைப் பொருட்களை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக உங்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தாங்கள் அனுப்பிவைத்த கலைப் பொருட்களில், ராஜஸ்தான், மேற்குவங்கம், குஜராத், இமாச்சலப்பிரதேசம் மற்றும் பல்வேறு இந்திய மாநிலங்களிலிருந்து சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட பல நூறு ஆண்டுகால சிலைகள் மற்றும் ஓவியங்கள் உள்ளிட்டவை அடங்கும். இதற்காக  இந்தியர்கள் அனைவரின் சார்பிலும் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

**************

(Release ID:1867685)

Sri/RR



(Release ID: 1868426) Visitor Counter : 99