பிரதமர் அலுவலகம்

குஜராத் மாநிலம் மோதெராவில் வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு நிகழ்வில் பிரதமரின் உரை

Posted On: 09 OCT 2022 11:39PM by PIB Chennai

மோதெரா, மெஹ்சானா மற்றும் ஒட்டு மொத்த வட குஜராத் பகுதிகளுக்கு இன்று புதிய ஆற்றல் கிடைத்துள்ளது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்தத் திட்டங்கள், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, விவசாயிகள் மற்றும் கால்நடை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த பகுதியில் பாரம்பரிய சுற்றுலா சம்பந்தமான வசதிகளை மேம்படுத்தவும் உதவிகரமாக இருக்கும்.

நண்பர்களே,

மோதெராவில் இன்று காணப்படும் குஜராத்தின் திறன், மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் சிறந்து விளங்குகிறது. எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளான மோதெரா, இப்போது அதன் புராணக் கதைகளுக்கும், நவீனத்துவத்திற்கும் உலகளவில் ஓர் முன்னுதாரணமாகத் திகழ்கிறது. உலகில் சூரிய மின்சக்தி என்ற வார்த்தை ஒலிக்கும் போதெல்லாம், மோதெரா, அப்போது தனித்து நிற்கும். ஏனென்றால் இங்கு வீடுகளுக்கான மின்சாரம் முதல் வேளாண்மை வரை அனைத்தும் சூரிய மின்சக்தியிலேயே இயங்குகின்றன. இதேபோல, அனைத்து வாகனங்களையும் சூரிய மின்சக்தியில் இயக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். 21-ஆம் நூற்றாண்டின் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு, நமது எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இது போன்ற நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்.

 

நண்பர்களே,

தற்போதைய சூழலின்படி மின்சாரத்தை அரசு உற்பத்தி செய்து அதனை மக்கள் வாங்கி வருகின்றனர். எனினும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், விளைநிலங்களிலும் சூரிய மின் தகடுகளையும், சூர்யா மின்சக்தியில் இயங்கும் பம்புகளையும் பொருத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான தொடர் முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. சூரிய மின்சக்தியை ஊக்குவிக்க அரசு நிதி உதவியை அளிப்பதோடு, சூரிய மின்சக்தியில் இயங்கும் லட்சக்கணக்கான பம்புகளையும் வழங்கி வருகிறது.

மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி இருந்தால் தொழில்துறை வளர்ச்சி பெறுவதோடு, வேளாண்மை மற்றும் பால் உற்பத்தியும் அதிகரிக்கும். தற்போது உணவு பூங்காக்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

நண்பர்களே,

கடந்த இரண்டு தசாப்தங்களில் இணைப்பு வசதிகளில் நாம் கவனம் செலுத்தினோம். இரட்டை எஞ்சின் அரசின் வடிவத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் வளர்ச்சிப் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நல்வாழ்த்துகளும், நன்றியும்.

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை குஜராத்தி மொழியில் வழங்கியிருந்தார்.

 

*******

(Release ID:1866343)



(Release ID: 1867033) Visitor Counter : 118