பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்று சாதனை படைத்த இந்திய விமானப் போக்குவரத்து துறைக்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 11 OCT 2022 10:26AM by PIB Chennai

இந்திய சிவில் விமானப் போக்குவரத்து தினசரி 4 லட்சம் பயணிகளை எட்டியதுடன், கொவிட்-19 காலத்திற்கு முன்பு இருந்ததை விட சாதனை எண்ணிக்கையை  எட்டியுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும்  விமானப் போக்குவரத்து இணைப்பை மேலும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுவதாகவும், இது எளிதாக வாழ்வதற்கும்பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கியமானது என்றும் திரு மோடி கூறியுள்ளார்.

சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி பிரதமர் கூறியிருப்பதாவது;

"சிறந்த அறிகுறி. இந்தியா முழுவதும் இணைப்பை மேலும் வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படும். இது எளிதான வாழ்க்கை, மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியமானதாகும்".

**************

(Release ID: 1866654)

PKV/AG/RR


(रिलीज़ आईडी: 1866681) आगंतुक पटल : 245
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam