பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மைசூரு தசரா விழாவின் காட்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 06 OCT 2022 3:13PM by PIB Chennai

மைசூரு தசரா விழாவின் காட்சிகளை பகிர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தங்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், அழகிய முறையில் பாதுகாப்பதற்காக மைசூரு மக்களின் உறுதியை பாராட்டினார். அண்மையில், 2022 யோகா தின நிகழ்வின் போது தமது மைசூரு பயணத்தின் இனிய நினைவுகளை பிரதமர் நினைவு கூர்ந்தார்.

 

குடிமக்களில் ஒருவரின் ட்விட்டரை மேற்கோள் காட்டி, பிரதமர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

 “மைசூரு தசரா கண்கொள்ளா  காட்சியைக் கொண்டுள்ளது.   தங்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், அழகிய முறையில் பாதுகாப்பதற்காக மைசூரு மக்களை நான் பாராட்டுகிறேன். அண்மையில், 2022 யோகா தின நிகழ்வின் போது எனது மைசூரு பயணத்தின் இனிய நினைவுகளை நான் கொண்டிருக்கிறேன்”.

 

*****

 

SMB/Gee/Sri


(रिलीज़ आईडी: 1865605) आगंतुक पटल : 192
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam