பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலம் அம்பாஜியில் ரூ. 7200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்

Posted On: 30 SEP 2022 8:18PM by PIB Chennai

குஜராத் மாநிலம் அம்பாஜியில் ரூ. 7200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ்  சுமார் 45,000 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்பணித்தார். பிரசாத் திட்டத்தின் கீழ் அம்பாஜி ஆலயத்தில் யாத்திரிகர்களுக்கான மேம்பாட்டு வசதிகள் மற்றும் தரங்கா மலை- அம்பாஜி- அபு சாலை புதிய அகல பாதை வழிதடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இது தவிர பல்வேறு சாலைத் திட்டங்களையும் அவர் நாட்டிற்கு அர்பணித்தார்.

 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியாவில் பெண்களுக்கு வழங்கப்படும் மரியாதையை சுட்டிக் காட்டினார். பிற நாடுகளைப் போல அல்லாமல் மகளிர் சக்தி என்பது நமது கலாச்சாரத்தில் வேரூன்றி இருப்பதாகக் கூறினார். இருந்த போதும் பெண்களுக்கு நிதி சம்பந்தமான விஷயங்கள் போன்றவற்றில் வரையறுக்கப்பட்ட உரிமைகள் மட்டுமே இருந்ததாகத் தெரிவித்த அவர், பல்வேறு வீட்டு வசதி திட்டங்களின் கீழ் பெரும்பாலான வீடுகள் பெண்களின் பெயரிலோ அல்லது அவர்களது பெயரும் சேர்த்தோ இருப்பதன் மூலம் இந்த நிலை சரி செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார். மூன்று கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

 

சுமார் 80 கோடி மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் இலவச ரேஷன் பொருட்கள் திட்டத்தை இந்த பண்டிகை காலத்தில் நீட்டிப்பதற்காக மத்திய அரசு ரூ. 4 லட்சம் கோடி செலவிடுவதாக பிரதமர் குறிப்பிட்டார். 2014-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் வசிக்கும் பெண்களின் வாழ்க்கை அம்சங்கள் ஒவ்வொன்றும் கருத்தில் கொள்ளப்படுவதோடு, நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் அவர்கள் உந்து சக்தியாக மாறி இருப்பதாக அவர் தெரிவித்தார். மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் அனைத்திலும் மகளிர் சக்தியே மையமாக இருப்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், கழிவறைகள், எரிவாயு இணைப்புகள், வீடு தோறும் குடிநீர், மக்கள் நிதி கணக்குகள், முத்ரா திட்டத்தின் கீழ் உத்தரவாதம் அல்லாமல் கடன் போன்ற திட்டங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளைக் குறிப்பிட்டு பேசினார். இன்று தொடங்கப்பட்ட திட்டங்களால் விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பயனடைவார்கள் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு புபேந்திர பட்டேல், மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், இணை அமைச்சர் திருமதி தர்ஷணா விக்ரம் ஜர்தோஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு சி. ஆர். பாட்டில், திரு பிரபாத் பாய் பட்டேல், திரு பாராசின்ஹ் தாபி மற்றும் திரு தினேஷ்பாய் அனவைத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1863918

**************


(Release ID: 1864062) Visitor Counter : 184