தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

தாதா சாஹேப் பால்கே விருது 2020 வழங்கி ஆஷா பரேக் கவுரவிக்கப்படவுள்ளார்

68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா செப்டம்பர் 30 அன்று நடைபெறும்
விருது வழங்கும் விழாவிற்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தலைமை தாங்குவார்

Posted On: 27 SEP 2022 1:35PM by PIB Chennai

2020-ம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது பிரபல திரைப்பட நடிகை திருமதி ஆஷா பரேக் பெறுவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. புதுதில்லியில் நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படும்.

இந்த முடிவு குறித்து அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், “இந்திய சினிமாவிற்கு திருமதி ஆஷா பரேக் வாழ்நாள் முழுவதும் மிகச்சிறந்த பங்களிப்பு செய்ததை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு தாதா சாஹேப் விருதுக்கான அறிவிப்பை வெளியிடுவதில் நான் பெருமை அடைகிறேன்” என்றார். 2022 செப்டம்பர் 30 அன்று 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் என்பதை அறிவித்த அமைச்சர், குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு இந்த விழாவிற்கு தலைமை தாங்குவார் என்றும் கூறினார்.

 திருமதி ஆஷா பரேக் புகழ்பெற்ற திரைப்பட நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் இவற்றுடன் இந்திய செவ்வியல் நடனக் கலைஞருமாவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், தில் தேக்கே தேக்கோ என்ற திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியாக விளங்கினார். 95-க்கும் அதிகமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

1992-ல் திருமதி பரேக் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். 1998- முதல் 2001 வரை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் தலைவராக அவர் பணியாற்றியுள்ளார். ஐந்து உறுப்பினர் நடுவர் குழு திருமதி ஆஷாவுக்கு இந்த விருதினை வழங்கும் முடிவை மேற்கொண்டதாக திரு அனுராக் தாக்கூர் கூறினார்.  நடுவர் குழு விவரம் 1) திருமதி ஆஷா போஸ்லே 2) திருமதி ஹேமமாலினி, 3) திருமதி பூனம் தில்லான், 4) திரு டி எஸ் நாகாபரணா, 5) திரு உதித் நாராயண்.

**************

(Release ID: 1862497)



(Release ID: 1862560) Visitor Counter : 202