பிரதமர் அலுவலகம்
நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
21 SEP 2022 1:23PM by PIB Chennai
பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“ராஜு ஸ்ரீவஸ்தவா, நகைச்சுவை மற்றும் நேர்மறையான நடிப்பின் மூலம் நமது வாழ்க்கையை பிரகாசமாக்கினார். அவர் குறைந்த வயதில் நம்மை விட்டு பிரிந்து சென்ற போதிலும், அவர் பல ஆண்டுகளாக வெளிப்படுத்திய தனது செழுமையான நடிப்பால் எண்ணற்ற மக்களின் இதயங்களில் தொடர்ந்து வாழ்வார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.”
**************
(வெளியீட்டு அடையாள எண்: 1861122)
வருகையாளர் எண்ணிக்கை : 191
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam