பிரதமர் அலுவலகம்
1893-ஆம் ஆண்டு சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் வழங்கிய தலைசிறந்த உரையை பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
11 SEP 2022 10:26AM by PIB Chennai
1893-ஆம் ஆண்டு சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய தலைசிறந்த உரையை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவுகூர்ந்துள்ளார். 1893-ஆம் ஆண்டு இதே நாளில் சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர் தமது தலைசிறந்த உரைகளுள் ஒன்றை வழங்கியதாக திரு மோடி கூறியுள்ளார். அவரது உரை, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த ஒரு பார்வையை உலக நாடுகளுக்கு எடுத்துரைத்தது.
ட்விட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்ததாவது:
“செப்டம்பர் 11-ஆம் தேதி, சுவாமி விவேகானந்தருடன் சிறப்பு தொடர்புள்ள தினமாகும். 1893-ஆம் ஆண்டு இதே நாளில்தான் சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர் தமது தலைசிறந்த உரைகளுள் ஒன்றை வழங்கினார். அவரது உரை, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த ஒரு பார்வையை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டியது.”
----
(रिलीज़ आईडी: 1858435)
आगंतुक पटल : 235
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam