தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்தியாவின் விடுதலைப் போராட்டம் அடிப்படையிலான ‘சுதந்திரத்தைத் தேடி’ எனும் இணைய வழியிலான கல்வி விளையாட்டுத் தொடரை மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் தொடங்கிவைத்தார்
இது பொம்மைகள் மற்றும் விளையாட்டுகளில் மக்களை ‘ஈடுபடுத்தவும், பொழுதுபோக்கவும். கற்பிக்கவும்’ மாண்புமிகு பிரதமர் விடுத்த அழைப்பால் ஊக்கம் பெற்ற முன்முயற்சியாகும்
தொடர்ச்சியான செல்பேசி விளையாட்டுகள் மூலம் ‘சுதந்திரத்தின் 75- வது ஆண்டுப் பெருவிழாவை’ நினைவுகூர ஓராண்டு கால பங்களிப்புக்கு வெளியீட்டுப் பிரிவும் ஜிங்கா இந்தியாவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன
இணையம் வழியாக விளையாடுவோரின் மாபெறும் சந்தையை பயன்படுத்தவும் அதேசமயம் அவர்களுக்கு கற்பிக்கவும் விளையாட்டுகள் ஓர் முயற்சியாகும்: திரு அனுராக் தாக்கூர்
இந்த விளையாட்டுகள் விடுதலைப் போராட்டம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை எளிதாக பெறுவதற்கான களஞ்சியமாகும்: திரு தாக்கூர்
இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செல்பேசிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தொடங்கப்பட்டுள்ள இந்த விளையாட்டுகள் 2022 செப்டம்பரில் உலகம் முழுவதும் கிடைக்கும்
Posted On:
24 AUG 2022 6:32PM by PIB Chennai
சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழாவின் ஒரு பகுதியாகவும் இந்திய விடுதலைப்போராட்ட வரலாற்றை முன்னிலைப்படுத்தவும், ஜிங்கா இந்தியாவின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள ‘ஆசாதி க்வெஸ்ட்’ என்ற இணையம் வழியிலான செல்பேசி விளையாட்டுகள் தொடரை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு அபூர்வ சந்திரா ஜிங்கா இந்தியா நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி திரு கிஷோர் கிச்லி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு அனுராக் தாக்கூர், நமது விடுதலைப்போராட்ட வீரர்கள் மற்றும் அறியப்படாத நாயர்கள் விடுதலைப்போராட்டத்திற்கு செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் அரசின் தொடர் முயற்சிகளில் மற்றொன்றாக இது உள்ளது என்றார்.
“மிகப்பெருமளவிலான இணையவழி விளையாடுவோரின் சந்தையை பெறவும், விளையாட்டுகள் மூலம் அவர்களுக்கு கற்பிக்கவுமான முயற்சிகளாக இந்த விளையாட்டுகள் இருக்கும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்படாத விளையாட்டு வீரர்கள் பற்றிய தகவல்களை மத்திய அரசின் பல்வேறு துறைகள் சேகரித்துள்ளன” என்று அமைச்சர் தெரிவித்தார். அனைத்து வயதினரும் இந்த விளையாட்டுகளால் ஈர்க்கப்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த திரு தாக்கூர், இவை விரைவிலேயே வீட்டின் விரும்பதக்க விளையாட்டுகளாக மாறும் என்றார்.
ஆசாதி க்வெஸ்ட் குறித்து :
சுதந்திரத்தின் 75வது ஆண்டு பெருவிழா குறித்து கணினி விளையாட்டுகள் தொடரை உருவாக்க ஜிங்கா இந்தியாவுடன் வெளியீட்டுப் பிரிவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செல்பேசிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தொடங்கப்பட்டுள்ள இந்த விளையாட்டுகள் 2022 செப்டம்பரில் உலகம் முழுவதும் கிடைக்கும். இணையம் வழியாக விளையாட்டுகளை உருவாக்கும் ஜிங்கா இந்தியா நிறுவனம் 2010ல் பெங்களூருவில் அமைக்கப்பட்டது. செல்பேசியிலும், இணையதளத்திலும் மிகவும் பிரபலமான விளையாட்டுகள் சிலவற்றை இது உருவாக்கியுள்ளது.
‘கல்வியை விளையாட்டுமயமாக்குதல்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையின் ஒப்பற்ற விளையாட்டு தொடர்கள் நாட்டின் கல்வித்துறையை புரட்சிகரமானதாக மாற்றும். வகுப்பறை மற்றும் குறிப்பட்ட வயதுக்கு அப்பால் கற்றல் நடைமுறையை விரிவாக்குவதன் மூலம் விளையாட்டு அடிப்படையிலான கற்றல், சமமான வாழ்நாள் முழுமைக்குமான கல்வி கிடைக்கிறது. ஆசாதி க்வெஸ்ட் தொடர் இந்தியாவின் விடுதலைப் போராட்டம் மற்றும் நாட்டில் மகத்தான விடுதலைப்போராட்ட வீரர்களின் பாரம்பரியம் குறித்த அறிவின் தாக்கத்தை உருவாக்கும். இதன் மூலம், விளையாடுவோருக்கு பெருமித உணர்வும், கடமை உணர்வும் ஏற்படும். இது காலனிய மனோநிலையை அகற்றுவதற்கான கருவியாக இருப்பதோடு, 76 வது சுதந்திர தினத்தில் மாண்புமிகு பிரதமர் உரையில், இடம்பெற்ற ‘அமிர்தகாலத்தின் ஐந்து உறுதிமொழிகள்’ என்பதை வலியுறுத்துவதாவும் இருக்கும்.
ஆசாதி க்வெஸ்ட் தொடரின் முதலாவது விளையாட்டு: 3 புதிர்களை பொருத்துதல், இது மிகவும் எளிதான விளையாட்டாகும். இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் 1857 முதல் 1947 வரையிலான வண்ணமிகு பயணத்தை வெளிப்படுத்துவதாக இது இருக்கும். 495 நிலைகளில் விளையாடப்படும் இந்த விளையாட்டின் மூலம் விளையாடுவோர் 75 பொது அறிவு (ட்ரைவியா) அட்டைகளை பெறமுடியும். இவை ஒன்றொன்றும் வரலாற்றின் முக்கிய தருணங்களை விளக்குவதாக இருக்கும். இதன் மூலம் தரவரிசையும் விளையாட்டு பகிர்வும் சமூக ஊடகம் குறித்த நிலையும் தெரியும். மறுபக்கம் ஆசாதி க்வெஸ்ட் – பாரதத்தின் நாயகர்கள் என்பது பற்றிய புதிர் விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 75 நிலைகளில் 750 வினாக்கள் மூலம் இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய விளையாடுவோரின் ஞானத்தை பரிசோதிக்கும். 75 ஆசாதி வீரர் அட்டைகள் மூலம் அரிதாக அறியப்பட்ட நாயகர்கள் பற்றி அவர்களுக்கு தெரிவிக்கப்படுவதோடு இவை சமூக ஊடக தளங்களில் பகிரப்படும்.
வெளியீட்டுப் பிரிவு மற்றும் ஜிங்கா இந்தியா இடையேயான ஓராண்டு கால பங்களிப்பு, இதுபோன்ற மேலும் பல விளையாட்டுகளை வழங்கும். மேலும் இந்தியாவின் விடுதலைப்போராட்டத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றி கற்பிக்க தற்போது உள்ள விளையாட்டுகளின் உள்ளடக்கமும், சிறப்பம்சங்களும் விரிவாக்கப்படும். ஆசாதி க்வெஸ்ட் விளையாட்டை பூர்த்தி செய்வோருக்கு சான்றிதழ் உட்பட, ஒவ்வொரு மாதமும், வியத்தகு பரிசுகளை இந்த விளையாட்டுகளை விளையாடுவோருக்கு வழங்கப்படும்.
ஆசாதி க்வெஸ்ட் விளையாட்டுக்கான விவரங்களை இந்த இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். : http://davp.nic.in/ebook/goi_print/index.html
ஆசாதி க்வெஸ்ட் விளையாட்டுக்கு
ஐஓஎஸ் செல்பேசிகளுக்கான இணையதளம் https://apps.apple.com/us/app/azadi-quest-match-3-puzzle/id1633367594
ஆண்ட்ராய்டு செல்பேசிகளுக்கான இணையதளம் https://play.google.com/store/apps/details?id=com.zynga.missionazaadi
பாரதத்தின் நாயகர்கள் விளையாட்டுக்கு
ஐஓஎஸ் செல்பேசிகளுக்கான இணையதளம் https://apps.apple.com/us/app/heroes-of-bharat/id1634605427
ஆண்ட்ராய்டு செல்பேசிகளுக்கான இணையதளம் https://play.google.com/store/apps/details?id=com.zynga.heroes.of.bharat
***************
(Release ID: 1854176)
(Release ID: 1854630)
Visitor Counter : 637
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada