இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

முதலாவது கேலோ இந்தியா மகளிர் ஜூடோ போட்டி குவஹாத்தியில் 27-ந்தேதி தொடங்குகிறது

Posted On: 25 AUG 2022 1:40PM by PIB Chennai

முதலாவது கேலோ இந்தியா மகளிர் ஜூடோ போட்டி ஆகஸ்ட் 27 முதல் இந்தியாவில் நான்கு மண்டலங்களில் நடைபெற உள்ளது. மத்திய அரசின் முதன்மைத் திட்டத்தின் மூலம் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை முன்னெடுக்க  இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் எடுக்கப்பட்ட மற்றொரு முயற்சியாகும் இது.

தேசிய சுற்றுக்கு முன் நான்கு மண்டலங்களில் நடைபெறும் இந்தப் போட்டி, ஒரு திறந்த மண்டல அளவிலான தரவரிசைப் போட்டியாகும். போட்டியாளர்கள் சப்-ஜூனியர் (12-15 வயது), கேடட் (15-17 வயது), ஜூனியர் (15-20 வயது) சீனியர் (15+ வயது) ஆகிய நான்கு வயது பிரிவுகளில் உள்ளனர்.

விளையாட்டுத் துறை, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், போட்டியை நடத்துவதற்காக மொத்தம் ரூ. 1.74 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது, இதில் ரூ.48.86 லட்சம் பரிசுத் தொகையும் அடங்கும்.

பர்மிங்காமில் 2022 காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசீலா தேவி, “ஜூடோவுக்காக இதுபோன்ற போட்டியைத் திட்டமிட்டு, நாட்டில் விளையாட்டை முன்னெடுத்துச் செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததற்காக இந்திய ஜூடோ கூட்டமைப்பு மற்றும் விளையாட்டு ஆணையத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். இது உண்மையில் இந்தியாவில் ஜூடோவின் மேலும் வளர்ச்சிக்கு உதவும்” என்று கூறியுள்ளார்.

நான்கு மண்டலங்களிலும் போட்டியைத் தொடர்ந்து, தேசிய சுற்று அக்டோபர் 20-23 தேதிகளில் புதுதில்லியில் உள்ள கேடி ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் திட்டமிடப்பட்டுள்ளது.

4 மண்டலங்களுக்கான போட்டி அட்டவணை விவரம்:

கிழக்கு மண்டலம்- எஸ்ஏஐ மையம் குவஹாத்தி, அசாம் , ஆகஸ்ட் 27-31 .

தெற்கு மண்டலம்- விகேஎன் மேனன் ஸ்டேடியம், திருச்சூர், கேரளா, செப் 1-5 . வடக்கு மண்டலம்- பெஸ்டில் வூட் பள்ளி, டேராடூன், உத்தரகண்ட் ,| செப் 5-9. மேற்கு மண்டலம்- சர்தார் படேல் விளையாட்டு வளாகம், குஜராத், | செப் 11-15.

***************

(Release ID: 1854325)



(Release ID: 1854380) Visitor Counter : 181