பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சூரத்தில் நடந்த மூவண்ணக்கொடி பேரணியில் பிரதமர் ஆற்றிய உரையின் கருத்துகள் தமிழாக்கம்

Posted On: 10 AUG 2022 7:23PM by PIB Chennai

சுதந்திரதின அமிர்தப் பெருவிழாவுக்காக உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..!!

இன்னும் சில தினங்களில், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சுதந்திரதினத்துக்காக நாம் அனைவரும் தயாராகி வருகிறோம். இந்தியாவின் மூலைமுடுக்கெங்கிலும் மூவண்ணக்கொடி பறக்கிறது. குஜராத்தின் அனைத்து பகுதிகளிலும் உற்சாகம் நிறைந்து காணப்படுகிறது, அதன் பெருமையை சூரத் மேலும் அதிகரித்துள்ளது. நாட்டு மக்களின் ஒட்டுமொத்த பார்வையும், சூரத்தின் மேல் உள்ளது. சூரத்தின் மூவண்ணக்கொடி பேரணியில், சிறிய இந்தியாவை காண முடிகிறது.  இன்று ஒட்டுமொத்த இந்தியாவும், சூரத்தின் மூவண்ணக்கொடி பேரணியில் பங்கேற்கிறது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் இதில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியான விஷயம். சூரத், தனது தொழில்கள் மற்றும் வணிகம் மூலம் உலகம் முழுவதும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளது. இன்று சூரத்தில் நடைபெறும், மூவண்ணக்கொடி பேரணி, உலகைக் கவரும் விதமாக உள்ளது. 

நண்பர்களே,

சூரத்தின் மூவண்ணக்கொடி பேரணியில், நமது சுதந்திரப் போராட்டத்தின் உணர்வுகளை மக்கள் உயிர்ப்பித்துள்ளனர். இதில் கலந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் துணி வியாபாரி, ஒருவர் தொழிலாளி, ஒருவர் கைவினைக் கலைஞர், ஒருவர் தறி நெய்பவர், ஒருவர் போக்குவரத்துடனும், ஒருவர் தங்கம், வைரங்களுடனும், மற்றொருவர் நகைகளுடனும் தொடர்புடையவர்கள். 

நண்பர்களே,

நமது தேசியக்கொடியே, நாட்டின் ஜவுளித்தொழில், காதி மற்றும் தற்சார்பு இந்தியாவின் அடையாளமாக உள்ளது. இந்தத் துறையில் தன்னிறைவு பெற்ற, இந்தியாவுக்கான அடிப்படையை சூரத் எப்போதும் தயார் செய்து வருகிறது. சூரத்தின் ஜவுளித்தொழில், இந்தியாவின் தொழில்திறன், வளமை ஆகியவற்றின் உணர்வுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே, இந்த மூவண்ணக்கொடி பேரணி, அந்த பெருமை மற்றும் உத்வேகத்தை தன்னுள் அடக்கியுள்ளது.

நண்பர்களே,

இந்தியாவின் மூவண்ணக்கொடியில் மூன்று நிறங்கள் மட்டும் இல்லை என்றும், அதில் நமது கடந்த காலத்தின் பெருமை, நிகழ்காலத்திற்கான நமது அர்ப்பணிப்பு மற்றும் எதிர்கால கனவுகளின் பிரதிபலிப்பாகும் என்றும், நமது மூவண்ணக்கொடி, இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றின் சின்னம். சுதந்திரத்தில் ஈடுபட்ட போராளிகள், மூவண்ணக்கொடியில் நாட்டின் எதிர்காலத்தையும், கனவையும் கண்டனர். எந்த வகையிலும் தலைவணங்க விடவில்லை. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய இந்தியாவுக்கான பயணத்தை தொடங்கும்போது, மூவண்ணக்கொடி இந்தியாவின் ஒற்றுமையையும், உணர்வையும் மீண்டும் பிரதிபலிக்கிறது.

                                                      **********


(Release ID: 1852916) Visitor Counter : 195