தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள்தொடர்புகள் மற்றும் பொதுஒழுங்கை சீர்குலைக்கும் தவறான தகவல்களை பரப்பிய 8 யுட்யூப் சேனல்களை தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தடை செய்துள்ளது

Posted On: 18 AUG 2022 11:27AM by PIB Chennai

தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், 2021 தகவல் தொடர்பு சட்டத்தைப் பயன்படுத்தி, 8 யுட்யூப் செய்தி சேனல்கள், 1 முகநூல் கணக்கு மற்றும் 2 முகநூல் பதிவுகளை தடை செய்வதற்கான உத்தரவுகளை 16.08.2022 அன்று பிறப்பித்தது. தடை செய்யப்பட்ட யுட்யூப் சேனல்கள் மொத்தமாக, 114 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும், 85 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளன.

உள்ளடக்கம் பற்றிய பகுப்பாய்வு:

குறிப்பிட்ட இந்த யுட்யூப் சேனல்களில், இந்தியாவில் மத நல்லிணக்கத்துக்கு மாறாக வெறுப்பை தூண்டும் வகையிலும், உரிமைகள் தொடர்பான தவறான தகவல்களும் பதிவேற்றப்பட்டிருந்தன. மதம் குறித்த கட்டமைப்புகளை தகர்த்தெறிய இந்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக வெளியான செய்தியும்,  உதாரணமாகும். மதப்பண்டிகைகளைக் கொண்டாட இந்திய அரசு தடை விதித்து, மதப்போரை அறிவித்துள்ளது என்பன போன்ற செய்தியும், நாட்டில் மதக்கலவரத்தை தூண்டி, பொதுஒழுங்கை சீர்குலைக்க கூடியவையாகும்.

இந்த யுட்யூப் சேனல்கள், ஜம்மு காஷ்மீர் குறித்த பல்வேறு பொய்யான தகவல்களையும் பதிவேற்றியிருந்தன. தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு நட்புறவு தொடர்பான இந்த தகவல்கள் முற்றிலும் தவறான கண்ணோட்டம் கொண்டதாக உள்ளன. தகவல் தொடர்பு அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டுள்ள இந்த சேனல்கள், இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவு, நாட்டின் பொதுஅமைதி ஆகியவற்றுக்கு குந்தகம் விளைவிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளன.

செயல்முறை:

தடை விதிக்கப்பட்ட இந்த யுட்யூப் சேனல்கள், போலியான மற்றும் பரபரப்பான சிறுபடங்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்களின் படங்கள், சில செய்தி தொலைக்காட்சிகளின் லோகோக்களை பயன்படுத்தி, பார்வையாளர்களை தவறாக வழிநடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

 

தடை செய்யப்பட்ட யுட்யூப் சேனல்கள் அனைத்திலும் மத நல்லிணக்கம், வெளிநாடுகளுடனான நட்புறவு மற்றும் பொதுஅமைதிக்கு பாதகம் ஏற்படுத்தும் உள்ளடக்கம் கொண்ட விடியோ காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த நடவடிக்கைகள் காரணமாக, 2021 டிசம்பர் முதல், 102 யுட்யூப் செய்தி சேனல்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை தடை செய்வதற்கான நெறிமுறைகளை அமைச்சகம் வெளியிட்டது. உண்மையான, நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் பாதுகாப்பான இணையவழி சுற்றுச்சூழலை உறுதி செய்வதிலும், இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாட்டு நட்புறவு மற்றும் பொதுஒழுங்கை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியை  முறியடிப்பதிலும் இந்திய அரசு உறுதியாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1852785

                                                                                                                             ***************



(Release ID: 1852845) Visitor Counter : 271