உள்துறை அமைச்சகம்
தமிழக தீயணைப்பு துறை வீரர்கள் உட்பட ஊர்க்காவல் படை மற்றும் உள்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
14 AUG 2022 11:35AM by PIB Chennai
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று தீயணைப்புத் துறை, உள்நாட்டு பாதுகாப்பு படை, ஊர்காவல் படை ஆகியவற்றில் வீர தீர செயல் புரிந்தவர்களுக்கும் சிறப்பாகவும் பாராட்டக்கூடிய வகையில் பணியாற்றியவர்களுக்கும் குடியரசுத் தலைவர் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
2022, சுதந்திர தினத்தை முன்னிட்டு தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 55 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த திரு ஆறுமுகம் ராமச்சந்திரன், போக்குவரத்து நிலைய அதிகாரி; திரு கூத்தன் பஞ்சவர்ணம், தீயணைப்பு வீரர்; திரு பரமசிவம் கந்தசாமி, தீயணைப்பு வாகன ஓட்டுநர்; திரு ரங்கராஜன் ராமச்சந்திரன், தீயணைப்பு வீரர் ஆகியோருக்கு பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
இவர்களுள் 6 வீரர்களுக்கு சிறப்பு சேவை விருதுகளும், 38 பேருக்கு போற்றத்தக்க வகையில் செயல்பட்டதற்காக குடியரசுத் தலைவரின் தீயணைப்புத்துறை பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
இது தவிர சுதந்திர தினத்தின் போது உள்நாட்டு படை மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 46 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவர்களில் 2 பேருக்கு வீர தீர செயல்களுக்கான விருது வழங்கப்படுகிறது.
ஊர்க்காவல் படையினர் மற்றும் உள்நாட்டு படையினருக்கான குடியரசுத் தலைவரின் பதக்கமும் சிறந்த சேவைக்கான பழக்கமும் முறையே 7 மற்றும் 37 பேருக்கு வழங்கப்படுகிறது. இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த திரு ஜேக்கப் விட்டோ பிளாக்கா, ஏரியா கமாண்டர் (ஊர்க்காவல் படை) மற்றும் திரு ராதா ரமணன் சங்கர் ராஜ், பிளாட்டூன் கமாண்டர் (ஊர்க்காவல் படை) ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1851689
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1851737)
வருகையாளர் எண்ணிக்கை : 436
இந்த வெளியீட்டை படிக்க:
Marathi
,
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada