பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஷரத் கமலுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 08 AUG 2022 7:52PM by PIB Chennai

பெர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள், 2022-இல் ஆண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஷரத் கமலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ட்விட்டர் பதிவில் பிரதமர்  தெரிவித்ததாவது:

“ஷரத் கமல் @sharathkamal1 வென்றிருக்கும் தங்கப் பதக்கம், வரலாற்றில் சிறப்பான ஒன்றாக பதிவு செய்யப்படும். பொறுமை, உறுதி மற்றும் நெகிழ்தன்மையின்  ஆற்றலை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அபாரமான திறமையை அவர் செயலில் காட்டினார். இந்திய டேபிள் டென்னிஸுக்கு இந்த பதக்கம் மிகப்பெரிய உந்து சக்தி.  அவருக்கு பாராட்டுகளோடு நல்வாழ்த்துகள். #Cheer4India”

*******


(வெளியீட்டு அடையாள எண்: 1850186) வருகையாளர் எண்ணிக்கை : 174