பிரதமர் அலுவலகம்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது பதக்கம் வென்றதற்காக பஜ்ரங் புனியாவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 AUG 2022 11:05PM by PIB Chennai
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது பதக்கம் வென்றதற்காக பஜ்ரங் புனியாவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022-ல் 65 கிலோ மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார்.
பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
"திறமை வாய்ந்த பஜ்ரங் புனியா நிலைத்தன்மை மற்றும் சிறப்பிற்கு இணையானவர். அவர் பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் குறிப்பிடத்தக்க சாதனைக்காகவும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் அவரது தொடர்ச்சியான 3வது தங்கப் பதக்கத்திற்காகவும் அவருக்கு வாழ்த்துகள். அவரது உணர்வும் நம்பிக்கையும் ஊக்கமளிக்கிறது. எப்போதும் எனது வாழ்த்துக்கள்".
**********
(வெளியீட்டு அடையாள எண்: 1849087)
வருகையாளர் எண்ணிக்கை : 141
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam