பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
நடப்பு 2022-23 கரும்பு பருவத்தில் விவசாயிகளுக்கு உகந்த மற்றொரு நடவடிக்கையாக கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான விலை வழங்க சர்க்கரை ஆலைகளுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
03 AUG 2022 6:19PM by PIB Chennai
கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நடப்பாண்டு கரும்பு பருவத்தில் (அக்டோபர் முதல் செப்டம்பர் வரை) கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ.305 வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் கடந்த 8 ஆண்டுகளில் கரும்புக்கான நியாயமான விலை 34 சதவீதத்திற்கு மேல் அரசு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
மத்திய அமைச்சரவையின் இந்த முடிவால் 5 கோடி கரும்பு விவசாயிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் பயனடைவார்கள். அத்துடன் கரும்பு ஆலையில் பணிபுரியும் 5 லட்சம் ஊழியர்களும் அது சார்ந்த தொழிலில் ஈடுபட்டவர்களும் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முடிவால் நடப்பு 2022-23 கரும்பு பருவத்தில் 3,600 லட்சம் டன்னுக்கும் மேலான அளவிற்கு கரும்பை விவசாயிகளிடமிருந்து கரும்பு ஆலைகள் கொள்முதல் செய்யும் என்றும் இதனால் விவசாயிகளுக்கு 1,20,000 கோடி ரூபாய் விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1847997
-----
(रिलीज़ आईडी: 1848062)
आगंतुक पटल : 1075
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam