பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மேற்கு வங்கத்தின் சிடால் குச்சியில் வேன் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்


பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 02 AUG 2022 5:34PM by PIB Chennai

மேற்கு வங்கத்தின் சிடால்குச்சியில் வேன் மீது மின்சாரம் தாக்கியதில் ஏற்பட்ட  உயிரிழப்பு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும் என்றும் திரு மோடி  அறிவித்துள்ளார்

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

மேற்கு வங்க மாநிலம் சிடால்குச்சியில் வேன் மீது மின்சாரம் தாக்கியதன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் : பிரதமர்

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்: பிரதமர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1847556) வருகையாளர் எண்ணிக்கை : 185