பிரதமர் அலுவலகம்
காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் தங்கப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவிற்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
30 JUL 2022 11:03PM by PIB Chennai
பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் தங்கப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியதாவது:
“தலைசிறந்த மீராபாய் சானு @mirabai_chanu மீண்டும் ஒருமுறை இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்துள்ளார். தங்கப்பதக்கம் வென்று, பெர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகளில் புதிய சாதனை புரிந்ததற்காக இந்தியர்கள் அனைவரும் மகிழ்கின்றனர். அவரது வெற்றி, ஏராளமான இந்தியர்களுக்கு, குறிப்பாக வளர்ந்து வரும் தடகள வீரர்களுக்கு ஊக்கமளிக்கிறது.”
*********
(Release ID: 1846729)
Visitor Counter : 150
Read this release in:
Kannada
,
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam