பிரதமர் அலுவலகம்
குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி திரௌபதி முர்முவுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
21 JUL 2022 9:12PM by PIB Chennai
இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி திரௌபதி முர்முவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள தொடர்ச்சியான ட்விட்டர் செய்திகளில் கூறியிருப்பதாவது:
“இந்தியா வரலாறு படைத்துள்ளது. விடுதலையின் அமிர்த பெருவிழாவை 1.3 பில்லியன் இந்தியர்கள் கொண்டாடி வரும் வேளையில், இந்தியாவின் கிழக்கில் உள்ள தொலைதூர பகுதியில் பிறந்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இந்திய திருமகள் ஒருவர் நமது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த சாதனையைப் புரிந்த திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு வாழ்த்துகள்.”
“திருமதி திரௌபதி முர்மு அவர்களின் வாழ்க்கை, தொடக்க கால போராட்டங்கள், வளமான சேவை, தலைசிறந்த வெற்றி ஆகியவை ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிக்கிறது. நம் குடிமக்களுக்கு, குறிப்பாக ஏழைகள், விளிம்பு நிலையில் உள்ள மற்றும் பின்தங்கிய பிரிவினரின் நம்பிக்கையாக அவர் உருவெடுத்துள்ளார்.”
“திருமதி திரௌபதி முர்மு அவர்கள் தலைசிறந்த சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஜார்க்கண்ட் ஆளுநராக அவரது பதவிக்காலம் மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்தது. இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை வலுப்படுத்தி, மிகச்சிறந்த குடியரசுத்தலைவராக அவர் நாட்டை முன்னெடுத்துச் செல்வார் என்று நான் நம்புகிறேன்.”
“கட்சி வேறுபாடின்றி, திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு ஆதரவளித்த அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரது வெற்றி நம் ஜனநாயகத்திற்கு வலு சேர்த்துள்ளது.”
***************
(Release ID: 1843621)
(Release ID: 1843686)
Visitor Counter : 196
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam