பிரதமர் அலுவலகம்

இமாச்சலப் பிரதேசத்தின் குலுவில் ஏற்பட்ட பேருந்து விபத்திற்கு பிரதமர் வேதனை தெரிவித்துள்ளார்


பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவித்தொகை அறிவிப்பு

Posted On: 04 JUL 2022 11:31AM by PIB Chennai

இமாச்சலப் பிரதேசத்தின் குலுவில் ஏற்பட்ட கோரமான பேருந்து விபத்து காரணமான உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு  தலா ரூ. 50,000-மும் வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

இமாச்சலப் பிரதேசத்தின் குலுவில் ஏற்பட்ட பேருந்து விபத்து மனதை உருக்குகிறது. இத்தகைய சோகமான தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உள்ளூர் நிர்வாகம் வழங்கி வருகிறது: பிரதமர் @narendramodi

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட கோரமான பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்.

***************



(Release ID: 1839040) Visitor Counter : 152