பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 JUL 2022 3:43PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதினுடன் இன்று தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
டிசம்பர் 2021-ல் அதிபர் புதின் இந்தியா வந்தபோது மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் நிறைவேற்றப்படுவது குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். குறிப்பாக, வேளாண் பொருட்கள், உரம் மற்றும் மருந்து பொருட்கள் தொடர்பான இருதரப்பு வர்த்தகத்தை எந்தளவு மேலும் ஊக்குவிப்பது என்பது குறித்து கருத்து பரிமாறிக்கொண்டனர்.
சர்வதேச எரிசக்தி மற்றும் உணவுசந்தைகளின் நிலைமை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இருதலைவர்களும் விவாதித்தனர்.
உக்ரைனின் தற்போதைய நிலவரம் பற்றி பேசுகையில், இப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியில் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை பிரதமர் வலியுறுத்தினார்.
பல்வேறு சர்வதேச மற்றும் இருதரப்பு விவகாரங்கள் குறித்து இது போன்று அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தவும் இருதலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1838583)
வருகையாளர் எண்ணிக்கை : 304
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam