பிரதமர் அலுவலகம்

வதோதராவில் குஜராத் கவுரவ இயக்கத்தில் பிரதமர் பங்கேற்றார்


21,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 1.4 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளின் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா

ரூ. 16,000 கோடிக்கும் அதிகமான திட்டங்கள் மூலம் இப்பகுதியில் ரயில்வே இணைப்புக்கு பெரும் ஊக்கம்

ரூ. 800 கோடி செலவில் 'முதலமைச்சர் பெண்கள் சக்தி திட்டம் ' தொடங்கப்பட்டது.

"21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்கு பெண்களின் விரைவான வளர்ச்சி மற்றும் அதிகாரமளித்தல் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது"

" பெண்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளை மனதில் கொண்டு இந்தியா இன்று திட்டங்களை வகுத்து முடிவுகளை எடுத்து வருகிறது"

“வதோதரா என்பது சங்காரங்களின் நகரம். இங்கு வருபவர்களை இந்த நகரம் எல்லா வகையிலும் கவனித்துக் கொள்கிறது”

"முடிவெடுக்கும் இடத்தில் அதிக வாய்ப்புகளை வழங்கவும், குஜராத்தில் ஒவ்வொரு மட்டத்திலும் பெண்களை மேம்படுத்தவும் நாங்கள் முயற்சித்துள்ளோம்"

Posted On: 18 JUN 2022 3:25PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வதோதராவில் குஜராத் கவுரவ இயக்கத்தில்  பங்கேற்றார். ரூ.21,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அவர் தொடங்கி வைத்தார்இந்நிகழ்ச்சியில் பயனாளிகள், முதல்வர் திரு பூபேந்திரபாய் படேல், மத்திய, மாநில அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தொடக்கத்தில் பிரதமர், இன்று தனக்கு மாத்ரு வந்தனா (தாய் வழிபாடு) நாள் என்று கூறினார். இன்று 100வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் தமது தாயாரிடம்  ஆசி பெற்று அவர் இன்றைய  நாளை தொடங்கினார். அதன்பிறகு, பாவகத் மலையில் உள்ள ஸ்ரீ காளிகா மாதாவின் மறுவடிவமைக்கப்பட்ட கோவிலை அவர் திறந்து வைத்தார், அங்கு அமிர்த காலத்தில் நாட்டின் உறுதிமொழிகளை நிறைவேற்றவும், நாட்டிற்கு சேவை செய்ய பலம் அளிக்கவும் பிரார்த்தனை செய்தார். பின்னர் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  பெருமளவிலான பெண்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.

ரூ.21000 கோடி ரூபாய் மதிப்பிலான இன்றைய திட்டங்கள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், குஜராத்தின் வளர்ச்சி மூலம் இந்தியாவின் வளர்ச்சி என்ற கருத்துருவுக்கு இத்திட்டங்கள் வலு சேர்க்கும் என்றார். தாய்வழி சுகாதாரம், ஏழைகளுக்கான வீடுகள், இணைப்பு மற்றும் உயர்கல்வி ஆகியவற்றில் இந்த மிகப்பெரிய முதலீடு குஜராத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என்றும் அவர் கூறினார். இந்த திட்டங்களில் பல, பெண்களின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பானவை என்றும் அவர் கூறினார். பெண்களுக்கு அதிகாரமளிப்பதை வளர்ச்சியின் அடிநாதமாக மாற்றும் இரட்டை இயந்திர அரசின் முயற்சிகள் மா காளிகாவின் ஆசியால் புதிய உந்துதலை பெற்றுள்ளது. "பெண்களின் விரைவான வளர்ச்சி மற்றும் அதிகாரமளித்தல் , 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்கு சமமாக முக்கியமானது. இன்று இந்தியா பெண்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளை மனதில் கொண்டு திட்டங்களை உருவாக்கி முடிவுகளை எடுத்து வருகிறது, என்று அவர் கூறினார், கூட்டத்தில் பல பரிச்சயமான முகங்களைக் காணுவதாக குறிப்பிட்ட அவர்பெண்களுக்கான அனைத்துத் துறைகளிலும் வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் வாழ்க்கைச் சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் மனதில் கொண்டு பெண்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் வகுத்துள்ளதாகவும் கூறினார். "வதோதரா மாத்ரு சக்தி கொண்டாட்டத்திற்கு ஏற்ற நகரம், ஏனெனில் இது ஒரு தாயைப் போன்ற சம்ஸ்காரங்களை வழங்கும் நகரம். வதோதரா சம்ஸ்காரங்களின் நகரம். இந்த நகரம் இங்கு வருபவர்களை எல்லா வகையிலும் கவனித்து, இன்பத்திலும், துக்கத்திலும் அவர்களை ஆதரித்து, முன்னேற வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த நகரம் சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், வினோபா பாவே மற்றும் பாபாசாகேப் அம்பேதகர் போன்ற ஆளுமைகளை ஊக்கப்படுத்தியுள்ளது என்று பிரதமர் கூறினார். திரு மோடி தமது தனிப்பட்ட பயணத்தில் நகரம் ஆற்றிய பங்கையும் நினைவு கூர்ந்தார். 2014 ஆம் ஆண்டில் வதோதரா மற்றும் காசி விஸ்வநாதர் ஆகிய இருவராலும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். தாய் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார். தாயின் ஆரோக்கியம் அவளுக்கு மட்டுமல்லாமல், முழு குடும்பத்திற்கும், குறிப்பாக குழந்தைக்கு முக்கியமானது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் குஜராத் எனக்கு சேவை செய்ய வாய்ப்பளித்தபோது ஊட்டச்சத்து குறைபாடு இங்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. அன்றிலிருந்து நாங்கள் இந்த திசையில் ஒன்றன் பின் ஒன்றாக செயல்படத் தொடங்கினோம், அதன் பலன்கள் இன்று காணப்படுகின்றன," என்று அவர் மேலும் கூறினார். பழங்குடியினப் பகுதிகளில் அரிவாள் செல் பிரச்சனையைக் கையாள்வதற்காக எடுக்கப்பட்ட  நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் பேசினார். செப்டம்பர் மாதத்தை - ஊட்டச்சத்து மாதமாக கொண்டாட முடிவு செய்திருப்பது குஜராத்தில் பெண்களுக்கு உதவும் என்று அவர் கூறினார். ஊட்டச்சத்துக்கு அப்பால், தூய்மை இந்தியா மற்றும் உஜ்வாலா போன்ற திட்டங்கள் மூலம் பெண்களுக்கு உகந்த சூழலை வழங்குவதற்கு அரசு பாடுபட்டு வருவதாக அவர் கூறினார்.

குஜராத் மாநிலத்தில் பெண்களை ஒவ்வொரு மட்டத்திலும் ஊக்குவிக்க, முடிவெடுக்கும் இடத்தில் அதிக வாய்ப்புகளை வழங்க முயற்சித்துள்ளோம். பெண்களின் நிர்வாகத் திறனைப் புரிந்துகொண்டு, கிராமம் தொடர்பான பல திட்டங்களில் சகோதரிகளுக்கு தலைமைப் பொறுப்புகள்  வழங்கப்பட்டுள்ளன", என்று பிரதமர் தொடர்ந்தார். குடும்பத்தின் நிதி முடிவெடுப்பதில் பெண்களுக்கான முக்கிய பங்கை உறுதி செய்வதற்கான உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். ஜன்தன் கணக்குகள், முத்ரா திட்டம் மற்றும் ஸ்வரோஜ்கர் யோஜனா ஆகியவை இந்த நோக்கத்திற்காக பங்களிக்கின்றன. நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்கான நடவடிக்கைகளையும் திரு மோடி பட்டியலிட்டார். நகர்ப்புற ஏழைக் குடும்பங்கள் ஏற்கனவே 7.5 லட்சம் வீடுகளைப் பெற்றுள்ளன. 4.5 லட்சம் நடுத்தர குடும்பங்கள் வீடுகள் கட்ட உதவி பெற்றுள்ளன என்றார் அவர். நியாயமான வாடகைக்கான திட்டங்கள் மற்றும் ஸ்வாநிதி யோஜனா ஆகியவை கிராமப்புற ஏழை மற்றும் நடுத்தர வர்க்கப் பிரிவினருக்கு உதவி செய்கின்றன. மாநிலத்தின் தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குஜராத்தில் சுற்றுலா மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் வதோதராவுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று பிரதமர் கூறினார் . பாவகாத், கெவாடியா ஆகியவை சுற்றுலா மையங்களாக உருவாக்கப்பட்டுள்ளன. வதோதரா ரயில்வே மற்றும் விமான உள்கட்டமைப்பில் பெரும்  முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. இதேபோல், மத்திய பல்கலைக்கழகம், ரயில் பல்கலைக்கழகம், பிர்சா முண்டா பழங்குடியினர் பல்கலைக்கழகம் ஆகியவை கல்வித் துறையில் புதிய ஆற்றலைக் கொண்டு வருகின்றன என்று பிரதமர் கூறினார்.

நிகழ்ச்சிகளின் விவரங்கள்:

ரூ.16,000 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களைப் பிரதமர் அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார். 357 கிமீ நீளமுள்ள புதிய பலன்பூர் - மதார் பகுதி பிரத்யேக சரக்கு வழித்தடத்தின் அர்ப்பணிப்பு இதில் அடங்கும்; 166 கிமீ நீளமுள்ள அகமதாபாத்-போடாட் பகுதியின் பாதை மாற்றம்; 81 கிமீ நீளமுள்ள பாலன்பூர் - மிதா பிரிவு, மற்றவற்றில் மின்மயமாக்கல். சூரத், உத்னா, சோம்நாத் & சபர்மதி நிலையங்களின் மறுமேம்பாட்டிற்கான அடிக்கல்லையும், ரயில்வே துறையில் மற்ற முன்முயற்சிகளுக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். இந்தத் திட்டங்கள் தளவாடச் செலவைக் குறைக்கவும், இப்பகுதியில் தொழில் மற்றும் விவசாயத் துறையை மேம்படுத்தவும் உதவும். அவை பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்துவதோடு பயணிகளின் வசதிகளையும் மேம்படுத்தும்.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், நகர்ப்புறங்களில் சுமார் ரூ.1,800 கோடி மதிப்பிலான வீடுகள் மற்றும் கிராமப்புறங்களில் ரூ.1,530 கோடி மதிப்பிலான வீடுகள் என மொத்தம் 1.38 லட்சம் வீடுகள் பிரதமரால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.. மேலும், ரூ.310 கோடி மதிப்பிலான சுமார் 3000 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

நிகழ்ச்சியின் போது, இப்பகுதியில் எளிதான வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில், ரூ.680 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை, கேடா, ஆனந்த், வதோதரா, சோட்டா உடேபூர் மற்றும் பஞ்ச்மஹால் ஆகிய இடங்களில் பிரதமர் அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார்.

குஜராத் மாநிலம் தபோய் தாலுகாவின் குந்தேலா கிராமத்தில் குஜராத் மத்திய பல்கலைக்கழகத்தின் அடிக்கல்லையும் பிரதமர் நாட்டினார். வதோதரா நகரத்திலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகம் சுமார் ரூ.425 கோடி செலவில் கட்டப்பட்டு 2500க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயர்கல்வி தேவைகளை பூர்த்தி செய்யும்.

தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, ரூ.800 கோடி செலவில் 'முதலமைச்சர் பெண்கள் சக்தி  திட்டத்தை பிரதமர் தொடங்கினார். இத்திட்டத்தின் கீழ், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒவ்வொரு மாதமும் அங்கன்வாடி மையங்களில் இருந்து 2 கிலோ கொண்டைக்கடலை, 1 கிலோ உளுத்தம் பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். 'போஷன் சுதா யோஜனா' திட்டத்திற்காக சுமார் ரூ.120 கோடியை பிரதமர் வழங்கினார். இது இப்போது மாநிலத்தில் உள்ள அனைத்து பழங்குடியின பயனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பழங்குடி மாவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இரும்புச் சத்து மற்றும் கால்சியம் மாத்திரைகள் மற்றும் ஊட்டச்சத்து குறித்த கல்வி வழங்கும் சோதனை வெற்றியடைந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

•••••••••••••

 



(Release ID: 1835097) Visitor Counter : 149