பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

‘8 ஆண்டு நல்லாட்சியின்‘ சிறப்பம்சம்களை பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 04 JUN 2022 2:46PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி,  தமது 8 ஆண்டுகால நல்லாட்சியின்போது,  மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து,  தமது இணையதளம் (narendramodi.in) மற்றும் MyGov இணையதளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் ட்விட்டர் பதிவுகளை பகிர்ந்துள்ளார்.   இந்தக் கட்டுரைகள் மற்றும் ட்விட்டர் பதிவுகள், மத்திய அரசின் தற்சார்பு இந்தியா,  மக்கள் நலன் சார்ந்த மற்றும் மனிதநேய அணுகுமுறை,  பாதுகாப்புத்துறை சீர்திருத்தங்கள் மற்றும் ஏழைகள் நலன் சார்ந்த ஆளுகையை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை எடுத்துரைக்கின்றன.  

பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில்: 

“தற்சார்பு இந்தியாவை உருவாக்க 130கோடி இந்தியர்கள் முடிவு செய்துள்ளனர்.  தற்சார்புக்கான எங்களது(அரசின்) ஊக்குவிப்பு நடவடிக்கைகள்,   உலகம் வளம் பெறுவதற்கான பங்களிப்பால் உருவானது.  #8YearsOfSushasan”.

“எங்களது அரசு, ஒவ்வொரு இந்தியரின் நலனையும் பாதுகாக்கும் அரசாகும்.  நாங்கள், மக்கள் நலன் சார்ந்த மற்றும் மனிதநேய அணுகுமுறையுடன் இயக்கப்படுகிறோம். #8YearsOfSushasan”.  

“நமோ செயலியில் உள்ள இந்தக் கட்டுரை, உள்நாட்டுமயமாக்கல்,  பாதுகாப்பு தொழில்வழித் தடங்களை உருவாக்குதல்,  பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியை ஊக்குவித்தல் மற்றும் பல அம்சங்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தும்விதமாக பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சீர்திருத்தங்களை விளக்குகின்றன.  #8YearsOfSushasan”.   

“‘அனைபவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்,  அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம் மற்றும் அனைவரும் முயச்சிப்போம்‘ என்ற தாரக மந்திரத்தால் ஈர்க்கப்பட்ட எங்களது அரசு,  மக்கள் நலன் சார்ந்த ஆளுகையை ஊக்குவிப்பதற்கான  தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  இந்த முயற்சிகள், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் நலிந்த பிரிவினருக்கு உதவக் கூடியவை ஆகும். 

                                                                                    *****   

 

           


 


(Release ID: 1831136) Visitor Counter : 212