பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நமது தேசத்தை கட்டமைத்த மகத்தானவர்களை இந்தியா எவ்வாறு நினைவுகூர்கிறது என்பது பற்றிய கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்


கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பது குறித்த அரசின் பணி குறித்து மைகவ் ட்விட்டர் இணைப்பையும் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 02 JUN 2022 1:08PM by PIB Chennai

நமது தேசத்தை கட்டமைத்த மகத்தானவர்களை இந்தியா எவ்வாறு நினைவுகூர்கிறது என்பது பற்றிய பார்வையை  நமோ செயலியின் விகாஸ் யாத்ரா பிரிவில் கட்டுரையாக பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

 “நமது சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையிலான நிகழ்வாக சுதந்திரத்தின் 70-வது ஆண்டுப் பெருவிழாவை இந்த ஆண்டு நாம் நடத்துகிறோம். நமோ செயலியின் விகாஸ் யாத்ரா பிரிவில் உள்ள இந்தக் கட்டுரை நமது தேசத்தை கட்டமைத்த மகத்தானவர்களை இந்தியா எவ்வாறு நினைவுகூர்கிறது என்ற பார்வையை  வழங்குகிறது.

#கலாச்சாரபாதுகாப்பின்8ஆண்டுகள்"

இந்தியாவின் புகழ்மிக்க கலாச்சார பாதுகாப்புக்கு அரசின் பணியை எடுத்துரைக்கும் மைகவ் ட்விட்டர் பதிவையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“நமது புகழ்மிக்க கலாச்சாரத்தில் நாம் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம். அதன் பாதுகாப்புக்கும், கொண்டாட்டத்திற்கும் பணிசெய்யும் வாய்ப்பை பெற்றிருப்பதற்கு நாம் பெருமை கொள்கிறோம். #கலாச்சாரபாதுகாப்பின்8ஆண்டுகள்"

***************


(रिलीज़ आईडी: 1830474) आगंतुक पटल : 192
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam