ரெயில்வே அமைச்சகம்

இந்தியா-பங்களாதேஷ் இடையே நட்புறவுக்கான பிணைப்பு மீட்டுருவாக்கம்


இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும், பங்களாதேஷ் ரயில்வே அமைச்சர் முகமது நூருல் இஸ்லாம் சுஜனும் இணைந்து மித்தாலி விரைவு ரயில் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தனர்

Posted On: 01 JUN 2022 1:04PM by PIB Chennai

இந்தியா-பங்களாதேஷ் இடையே ரயில் போக்குவரத்து மூலம் மக்களுடன் மக்கள் தொடர்பை மேலும் வலுப்படுத்த இருநாட்டு அரசுகளும் பலமுறை சந்தித்த பின் ஹல்திபாரி- சிலாஹாத்தி இடையேயான வழித்தடத்தில் மித்தாலி விரைவு ரயில் சேவையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி நியூ ஜல்பைகுரி (இந்தியா) – டாக்கா (பங்களாதேஷ்) இடையே மூன்றாவது பயணிகள் ரயில் சேவையாக மித்தாலி விரைவு ரயில் போக்குவரத்து 2021 மார்ச் 27 அன்று இருநாடுகளின் பிரதமர்களால் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது இந்த சேவையை இந்திய ரயில்வே அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவும், பங்களாதேஷ் ரயில்வே அமைச்சர் முகமது நூருல் இஸ்லாம் சுஜனும் இணைந்து இன்று புதுதில்லி ரயில்வே பவனில் இருந்து மித்தாலி விரைவு ரயில் போக்குவரத்தை முறைப்படி கொடியசைத்து தொடங்கிவைத்தனர். ஏற்கனவே கொவிட் பெருந்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ரயில்சேவையை தொடங்க இயலவில்லை.

இன்றைய தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அஸ்வினி வைஷ்ணவ் மித்தாலி விரைவு ரயில் சேவை இருநாடுகளுக்கிடையேயான நட்புறவை அதிகரிப்பது, வலுப்படுத்துவது, மேம்படுத்துவது ஆகியவற்றில் மற்றும் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றார்.

 வாரம் இருமுறையாக இயக்கப்படும் இந்த ரயில் வண்டி, நியூஜல்பைகுரியிலிருந்து ஞாயிறு, புதன் கிழமைகளிலும், டாக்காவிலிருந்து  திங்கள், வியாழக்கிழமைகளிலும் புறப்படும்.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1830026

***************



(Release ID: 1830071) Visitor Counter : 182