பிரதமர் அலுவலகம்
குவாட் தலைவர்கள் உச்சிமாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசுடன் பிரதமர் மோடி சந்திப்பு
प्रविष्टि तिथि:
24 MAY 2022 2:24PM by PIB Chennai
குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதன்ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசை சந்தித்து பேசினார்.
அப்போது, தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக அல்பானீசுக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வர்த்தகம், தொழில் முதலீடு, பாதுகாப்பு, உற்பத்தி, அறிவியல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளின் பன்முக ஒத்துழைப்புகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், இருநாடுகளிடையேயான உறவில் நேர்மறையான வேகத்தை தொடர இருநாட்டு தலைவர்களும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். அதைத்தொடர்ந்து விரைவில் இந்தியாவுக்கு வருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
***************
(रिलीज़ आईडी: 1828002)
आगंतुक पटल : 235
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam