பிரதமர் அலுவலகம்
புயல் மற்றும் மின்னல் தாக்கிய சம்பவங்களால் பிகாரின் பல்வேறு மாவட்டங்களில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்
Posted On:
20 MAY 2022 11:12PM by PIB Chennai
புயல் மற்றும் மின்னல் தாக்கிய சம்பவங்களால் பிகாரின் பல்வேறு மாவட்டங்களில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உள்ளூர் நிர்வாகம் மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் வெளியிட்ட சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“பிகாரின் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் மற்றும் மின்னல் தாக்கிய சம்பவங்களில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்த ஈடு செய்ய முடியாத இழப்பை தாங்கிக் கொள்ளும் வலிமையை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கட்டும். மாநில அரசின் கண்காணிப்பின் கீழ், உள்ளூர் நிர்வாகம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது.”
(Release ID: 1827179)
Visitor Counter : 148
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam