தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAY 2022 12:22PM by PIB Chennai
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பிரான்சுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக நாளை (சனிக்கிழமை) பிரான்சுக்கு டாக்டர் முருகன் புறப்படுகிறார். திரைப்பட விழாவில் 22-ந் தேதி முதல், 24-ந் தேதி வரை அவர் கலந்து கொள்கிறார்.
டாக்டர் எல் முருகன் 22-ந் தேதி பிரான்ஸ் சென்றடைவார். பின்னர் அவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சந்திப்புகளில் பங்கேற்கிறார்.
டாக்டர் முருகன் 25-ந் தேதி காலையில் புதுதில்லி வந்து சேர்வார்.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1826917)
வருகையாளர் எண்ணிக்கை : 201