பிரதமர் அலுவலகம்
ஸ்ரீ சுவாமிநாராயண் ஆலயத்தால் மே 19-ஆம் தேதி நடத்தப்படும் ‘இளைஞர் முகாம்' நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றவுள்ளார்
प्रविष्टि तिथि:
18 MAY 2022 7:50PM by PIB Chennai
ஸ்ரீ சுவாமிநாராயண் ஆலயத்தால் மே 19-ஆம் தேதி நடத்தப்படும் ‘இளைஞர் முகாம்’ (யுவா ஷிவிர்) நிகழ்ச்சியில் காலை 10:30 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுவார். குந்தல்தம்மில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் ஆலயம், வதோதராவின் கரேலிபாக்கில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் ஆலயம் ஆகியவை இந்த முகாமை நடத்துகின்றன.
சமூக சேவையிலும் தேச கட்டமைப்பை நோக்கியும் அதிக இளைஞர்களை ஈடுபடுத்துவதே இந்த முகாமின் நோக்கமாகும். ஒரே பாரதம் உன்னத பாரதம், தற்சார்பு இந்தியா, தூய்மை இந்தியா போன்ற முன்முயற்சிகள் வாயிலாக புதிய இந்தியாவின் கட்டமைப்பில் இளைஞர்களை அங்கம் வகிக்கச் செய்வதும் இதன் நோக்கமாகும்.
******
(रिलीज़ आईडी: 1826572)
आगंतुक पटल : 166
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam