தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கேன்ஸ் படவிழாவில் ராக்கெட்ரி தமிழ்ப்படம் திரையிடப்படுகிறது மலையாளம், மராத்தி, இந்தி, மிஷிங் மொழித் திரைப்படங்களும் திரையிடப்படவுள்ளன.

Posted On: 12 MAY 2022 3:17PM by PIB Chennai

கேன்ஸ் தி்ரைப்படவிழாவில் திரையிடப்படவுள்ள  திரைப்படங்களின் பட்டியலை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம்  இன்று வெளியிட்டுள்ளது.   இதில் ஆர் மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி என்னும் திரைப்படமும் ஒன்றாகும்.

இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள ராக்கெட்ரி – தி நம்பி எபெஃக்ட் எனும் திரைப்படம் உலக பிரீமியர் காட்சியாக  நடைபெறும். மராத்தி மொழிப்படமான கோதாவரி, இந்தி மொழியைச் சேர்ந்த ஆல்பா பீட்டா காமா, மிஷின் மொழியைச் சேர்ந்த பூம்பா ரைட், இந்தி, மராத்தி, மொழியைச் சேர்ந்த  துயின், மலையாள மொழிப் படமான ட்ரீ ஃபுல் ஆஃப் பேரட்ஸ் ஆகிய படங்களும் கேன்ஸ் படவிழாவில் திரையிடப்படவுள்ளன.

ராக்கெட்ரி திரைப்படம்  பலாய்ஸ் கே அரங்கிலும் மற்ற திரைப்படங்கள் ஒலிம்பியா திரையரங்கிலும் திரையிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1824719

 

***************(Release ID: 1824801) Visitor Counter : 65