பிரதமர் அலுவலகம்

சர்வதேச செவிலியர்கள் தினத்தன்று, நமது பூமியை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் செவிலியர்களுக்குப் பிரதமர் பாராட்டு

Posted On: 12 MAY 2022 10:13AM by PIB Chennai

சர்வதேச செவிலியர்கள் தினத்தன்று, நமது பூமியை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் செவிலியர்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“நமது பூமியை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் செவிலியர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். அவர்களது அர்ப்பணிப்பும், கருணையும் போற்றத்தக்கது. சர்வதேச செவிலியர்கள் தினம் என்பது, மிகவும் சவாலான சூழ்நிலைகளிலும் அவர்களது அளப்பரிய பணிகளுக்காக அனைத்து  செவிலியர்களையும் பாராட்டும் நாளாகும்.”

***************

(Release ID: 1824577)



(Release ID: 1824650) Visitor Counter : 167