பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரபல சந்தூர் இசை மேதை பண்டிட் சிவ்குமார் ஷர்மாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 10 MAY 2022 1:25PM by PIB Chennai

பிரபல சந்தூர் இசை மேதை பண்டிட் சிவ்குமார் ஷர்மாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-

“பண்டிட் ஷிவ்குமார் ஷர்மா அவர்களின் மறைவால் நமது கலாச்சார உலகம் பேரிழப்பைச் சந்தித்துள்ளது. சந்தூர் இசைக்கருவியை  அவர் உலகளவில் பிரபலப்படுத்தினார்.  அவரது இசை வரும் தலைமுறையினரை தொடர்ந்து ஊக்குவிக்கும். நான் அவருடன் நடத்திய கலந்துரையாடல்களை அன்புடன் நினைவுகூர்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி”

------


(Release ID: 1824117) Visitor Counter : 169