நிதி அமைச்சகம்

பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம், அடல் ஓய்வூதியத் திட்டம்: சமூகப் பாதுகாப்பு வழங்கும் திட்டங்களின் 7-வது ஆண்டு நிறைவு விழாவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

Posted On: 09 MAY 2022 11:11AM by PIB Chennai

பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம், அடல் ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் 7-வது ஆண்டுவிழா இங்கே கொண்டாடப்படுகிறது. இந்தத் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி, 2015 மே 9 அன்று கொல்கத்தாவில் தொடங்கி வைத்தார்.

7-வது ஆண்டு  விழாவையொட்டி கருத்துத் தெரிவித்த மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், ”காப்பீடும், ஓய்வூதியமும் சாமானிய மக்களை சென்றடைய இந்த மூன்று திட்டங்களும் உதவியுள்ளன.  இந்தத் திட்டங்களில் கடந்த 7 ஆண்டுகளில் பதிவு செய்துள்ள மற்றும் பயனடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை இவற்றின் வெற்றிக்கான சான்றாக உள்ளன. ஏற்கனவே, தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் கிடைத்த  பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குறைந்த செலவிலான பாதுகாப்புத் திட்டங்களும், உத்தரவாதத்துடனான  ஓய்வூதியத் திட்டமும் தற்போது சமூகத்தின் கடைசி நபருக்கும் கிடைக்கின்றன” என்றார்.

பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஏழைகளிலும் ஏழையாக இருப்பவர்கள். நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவாக செலுத்தி, ரூ.2,00,000 ஆயுள் காப்பீடு  பெறமுடியும். பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவாக செலுத்தி, ரூ.2,00,000 விபத்து காப்பீடு பெறமுடியும். அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள 18 வயதுக்கும் 40 வயதுக்கும் உட்பட்ட அனைவரும் மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.42 சந்தா செலுத்தி 60 வயதுக்குப் பின் ஓய்வூதியம் பெறமுடியும் என்ற விவரங்களை நிதியமைச்சர் தெரிவித்தார்.

பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டதற்கு பின், இதுவரை 12,76  கோடி பேர் இதில் பதிவு செய்துள்ளனர். 5,76,121 பேரின்  குடும்பங்கள்   இந்தத் திட்டத்தின் கீழ், பணப்பலனாக ரூ.11,522 கோடியை  உரிமை கோரி பெற்றுள்ளன. பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 28.37 கோடி பேர், பதிவு செய்துள்ளனர். 97,227 உரிமை  கோறல்களுக்கு ரூ.1,930 கோடி வழங்கப்பட்டுள்ளது. 4 கோடிக்கும் அதிகமானோர் அடல் ஓய்வூதியதித் திட்டத்தின் கீழ் சந்தா செலுத்தியுள்ளனர் என்றும் திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1823754 

***************



(Release ID: 1823890) Visitor Counter : 14166