பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தெலுங்கானா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

பலியானோரின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAY 2022 9:00AM by PIB Chennai

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்இந்த விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு திரு மோடி, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

தெலுங்கானா மாநிலம்கமாரெட்டி மாவட்டத்தில் நடந்த விபத்தில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகள் வேதனை அளிக்கிறதுஇந்த விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு பிரார்த்தனைகள்உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும்அதேபோல் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்பிரதமர் மோடி

 

    ***


(வெளியீட்டு அடையாள எண்: 1823876) வருகையாளர் எண்ணிக்கை : 181