பிரதமர் அலுவலகம்

கோபன்ஹேகனில் இந்தியா – டென்மார்க் வர்த்தக அமைப்பின் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

Posted On: 03 MAY 2022 8:16PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, டென்மார்க் பிரதமர் திருமதி மெட்டே ஃபிரடெரிக்சென், டென்மார்க் பட்டத்து இளவரசர் ஃபிரடெரிக் ஆகியோருடன் கூட்டாக, டேனிஷ் தொழில்கூட்டமைப்பு வளாகத்தில் நடைபெற்ற இந்தியா – டென்மார்க் வர்த்தக அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இருபெரும் பொருளாதார நாடுகளும் திறமை மிகுந்தவை என்று குறிப்பிட்ட பிரதமர்,  பசுமைத் தொழில்நுட்பம், குளிர்பதனச்சங்கிலி, கழிவுகளை வளமாக்குதல், கப்பல் மற்றும் துறைமுகங்கள் போன்ற துறைகளில், இந்தியாவில் உள்ள  பெருமளவிலான வாய்ப்புகளை பயன்படுத்தி, இந்தியாவில் தொழில் தொடங்க முன்வருமாறு டேனிஷ் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்தியாவில் தொழில்துறைக்கு உகந்த அணுகுமுறை நிலவுவதை சுட்டிக்காட்டிய அவர், இருநாடுகளையும் சேர்ந்த தொழில் துறையினர், கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை ஆராயுமாறு கேட்டுக்கொண்டார்.

டென்மார்க் பிரதமர் ஃபிரடெரிக்சென் பேசுகையில், இருநாடுகளுக்கு இடையே பாலமாக செயல்படுவதில், தொழில்துறையினரின் பங்களிப்பை சுட்டிக்காட்டினார். 

இந்த சந்திப்பின்போது இருநாடுகளையும் சேர்ந்த கீழ்காணும் தொழில்துறையினர் கலந்து கொண்டனர்:

  • பசுமை தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல்
  • எரிசக்தி சுதந்திரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
  • தண்ணீர், சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை
  • கட்டமைப்பு வசதி, போக்குவரத்து & சேவைகள்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822412

------



(Release ID: 1822600) Visitor Counter : 146