பிரதமர் அலுவலகம்
ஜெர்மன் கூட்டமைப்பு குடியரசின் பிரதமரை, பிரதமர் திரு மோடி சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 MAY 2022 7:23PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜெர்மன் கூட்டமைப்புக் குடியரசின் பிரதமர் மேன்மை தாங்கிய ஓலஃப் ஷோல்சுடன் இன்று இருதரப்பு சந்திப்பை நடத்தினார். இந்தியா – ஜெர்மனி இடையே, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அரசுகளுக்கு இடையேயான ஆறாவது சுற்று ஆலோசனைகளுக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடந்துள்ளது.
ஜெர்மனி பிரதமர் மாளிகை வளாகத்தில், பிரதமர் திரு மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பிரதமர் ஷோல்ஸ், அன்புடன் வரவேற்றார். இதன் பின்னர் இருதலைவர்களும் நேருக்கு நேர் என்ற முறையில் சந்தித்தனர். இதைத் தொடர்ந்து தூதுக்குழு நிலையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ராணுவ ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய நிகழ்வுபோக்குகள் உட்பட இருதரப்பு ஒத்துழைப்புக் குறித்த முக்கிய விஷயங்கள் விவாதத்தில் இடம் பெற்றன.
-----
(Release ID: 1822100)
(வெளியீட்டு அடையாள எண்: 1822108)
வருகையாளர் எண்ணிக்கை : 240
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam