பிரதமர் அலுவலகம்
செமிகான் இந்தியா மாநாடு 2022-ன் தொடக்க நிகழ்வில் பிரதமர் வழங்கிய உரையின் தமிழாக்கம்
Posted On:
29 APR 2022 11:41AM by PIB Chennai
வணக்கம்!
வணக்கம் பெங்களூரு!
வணக்கம் செமிகான் இந்தியா!
அமைச்சர்கள் குழுவைச் சேர்ந்த எனது சகாக்களே, மின்னணு மற்றும் செமிகண்டக்டர் துறையின் தலைவர்களே; முதலீட்டாளர்களே; கல்வியாளர்களே மற்றும் நண்பர்களே,
இன்று தொடங்கியுள்ள செமி-கான் இந்தியா மாநாட்டிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் இதுபோன்ற மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகில் செமிகண்டக்டர்கள் நாம் கற்பனை செய்வதை விட பல வழிகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உலகளாவிய செமிகண்டக்டர்கள் விநியோகச் சங்கிலிகளின் முக்கிய பங்குதாரர்களில் ஒன்றாக இந்தியாவை நிறுவுவது நமது கூட்டு நோக்கமாகும். உயர் தொழில்நுட்பம், உயர் தரம் மற்றும் உயர் நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த திசையில் செயல்பட விரும்புகிறோம்.
நண்பர்களே,
செமிகண்டக்டர் தொழில்நுட்பங்களுக்கான கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக இந்தியா இருப்பதற்கு ஆறு காரணங்களை நான் காண்கிறேன்.
முதலில், 1.3 பில்லியன் இந்தியர்களை இணைக்கும் வகையில் டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம். இந்தியாவின் நிதி உள்ளடக்கம், வங்கி மற்றும் டிஜிட்டல் கட்டண புரட்சி பற்றி நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். யுபிஐ என்பது உலகின் மிகவும் திறமையான கட்டணக் கட்டமைப்பாகும். சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தில் இருந்து உள்ளடக்குதல் மற்றும் அதிகாரமளித்தல் என அனைத்து நிர்வாகத் துறைகளிலும் வாழ்க்கையை மாற்ற டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். தனிநபர் தரவை பயன்படுத்தும் மிகப்பெரிய நுகர்வோரில் ஒருவராக இருக்கிறோம். நாங்கள் மேலும் நாங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகிறோம்.
இரண்டாவதாக, அடுத்த தொழில்நுட்பப் புரட்சியை இந்தியா வழிநடத்த வழிவகை செய்கிறோம். ஆறு இலட்சம் கிராமங்களை பிராட்பேண்ட் மூலம் இணைக்கும் பாதையில் இருக்கிறோம். 5ஜி, ஐ ஓ டி மற்றும் சுத்தமான ஆற்றல் தொழில்நுட்பங்களில் திறன்களை மேம்படுத்துவதில் நாங்கள் முதலீடு செய்கிறோம். தரவு, செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற தொழில்நுட்பங்களில் புதுமையின் அடுத்த அலையை கட்டவிழ்த்துவிட நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
மூன்றாவதாக, இந்தியா வலுவான பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்கிறது. உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு எங்களிடம் உள்ளது. ஒவ்வொரு சில வாரங்களுக்கும் புதிய யூனிகார்ன்கள் வருகின்றன. செமிகண்டக்டர்களின் இந்தியாவின் சொந்த நுகர்வு 2026-ம் ஆண்டில் 80 பில்லியன் டாலர்களையும், 2030-ம் ஆண்டில் 110 பில்லியன் டாலர்களையும் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நான்காவதாக, இந்தியாவில் எளிதாக வணிகம் செய்வதை மேம்படுத்துவதற்காக பரந்த அளவிலான சீர்திருத்தங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். கடந்த ஆண்டு, 25,000 க்கும் மேற்பட்ட இணக்கங்களை நாங்கள் ரத்து செய்ததோடு உரிமங்களை தானாக புதுப்பிப்பதற்கான உந்துதலைக் கொடுத்தோம். இதேபோல், ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கு வேகத்தையும் வெளிப்படைத்தன்மையையும் டிஜிட்டல் மயமாக்கல் கொண்டு வருகிறது. இன்று, உலகில் மிகவும் சாதகமான வரிவிதிப்பு கட்டமைப்புகளில் இந்தியா ஒன்றாகும்.
ஐந்தாவதாக, 21-ம் நூற்றாண்டின் தேவைகளுக்காக இளம் இந்தியர்களுக்கு திறன் மற்றும் பயிற்சி அளிப்பதில் நாங்கள் அதிக முதலீடு செய்கிறோம். சிறப்பான செமிகண்டக்டர் வடிவமைப்பு திறமைக் குழு எங்களிடம் உள்ளது, உலகின் செமிகண்டக்டர் வடிவமைப்பு பொறியாளர்களில் 20% வரை இங்கு உள்ளனர். சுமார் 25 முன்னணி செமிகண்டக்டர் வடிவமைப்பு நிறுவனங்கள் தங்கள் வடிவமைப்பு அல்லது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை நம் நாட்டில் நிறுவியுள்ளன.
மேலும் ஆறாவதாக, இந்திய உற்பத்தித் துறையை மாற்றுவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நூற்றாண்டிற்கு ஒருமுறை வரும் பெருந்தொற்றை மனிதகுலம் எதிர்த்துப் போராடும் நேரத்தில், மக்களின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, நமது பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தையும் இந்தியா மேம்படுத்துகிறது.
நண்பர்களே,
எங்களின் ''உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை'' திட்டங்கள் 14 முக்கிய துறைகளில் 26 பில்லியன் டாலர்களுக்கு மேல் சலுகைகளை வழங்குகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் மின்னணு உற்பத்தித் துறை சாதனை வளர்ச்சியைக் காணும்.
10 பில்லியன் டாலர்களுக்கும் அதிக மதிப்பீட்டில் செமி-கான் இந்தியா திட்டத்தை நாங்கள் சமீபத்தில் அறிவித்தோம். செமி கண்டக்டர்கள் மற்றும் வடிவமைப்பு சுற்றுச்சூழல் ஆகியவற்றில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
செமிகண்டக்டர் சூழலியல் செழிக்க, அரசின் போதுமான ஆதரவை உறுதி செய்வது அவசியம் என்பதை நாங்கள் அறிவோம்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1821175
***************
(Release ID: 1821175)
(Release ID: 1821564)
Visitor Counter : 273
Read this release in:
Malayalam
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada