பிரதமர் அலுவலகம்
அசாம் மாநிலம் திப்புவில் அமைதி மற்றும் வளர்ச்சி பேரணியில் பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்
Posted On:
28 APR 2022 4:16PM by PIB Chennai
பாரத் மாதாகி ஜே!
அசாம் ஆளுநர் திரு ஜெகதீஷ் முகி அவர்களே, முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, கர்பி ராஜா திரு ராம் சிங் ரோங்காங்க் அவர்களே, மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, எனது சகோதர, சகோதரிகளே வணக்கம்.
,கர்பி ஆங்லாங் மக்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி. சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு பெருவிழாவும், அசாமின் மகத்தான புதல்வர் லச்சித் போர்புக்கானின் 400-ஆவது பிறந்த நாளும் இதே நேரத்தில் வருவது பொருத்தமானதாகும். தேசபக்திக்கும், தேச சக்திக்கும் லச்சித் போர்புக்கானின் வாழ்க்கை உத்வேகமாக உள்ளது. கர்பி ஆங்லாங்கிலிருந்து நாட்டின் மகத்தான நாயகனுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.
அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற உணர்வுடன் இரட்டை எஞ்சின் அரசு பணியாற்றுகிறது . இந்த தீர்மானம் கர்பிலாங்கில் இன்று மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. அசாமின் நிரந்தர அமைதிக்கும், துரித வளர்ச்சிக்கும் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை செயல்படுத்துவது துரித கதியில் நடைபெற்று வருகிறது.
2,600-க்கும் அதிகமான நீர்நிலைகளை கட்டமைக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. இந்த திட்டம் முழுமையாக மக்களின் பங்களிப்பை அடிப்படையாக கொண்டுள்ளது. இத்தகைய நீர்நிலைகள் பழங்குடி சமூகங்களின் வளமான பாரம்பரியங்கள். இந்த குளங்கள் கிராமங்களுக்கு தண்ணீர் சேமிப்பவையாக மட்டுமின்றி வருவாய்க்கான ஆதாரமாகவும் இருக்கும்.
வடகிழக்கின் பிரச்சினைகள் தற்போது குறைந்து வளர்ச்சி வேகம் எடுத்துள்ளது.இன்று அசாம் அல்லது வடகிழக்கு பகுதியின் மற்ற மாநிலங்களின் பழங்குடி பகுதிகளுக்கு யாராவது சென்றால் அவர் நிலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பாராட்டுவார். போடோ ஒப்பந்தம் நிரந்தர அமைதிக்குக் கதவுகளைத் திறந்துள்ளன. திரிபுராவிலும் என்ஐஎஃப்டி அமைதியை நோக்கி வருகிறது. 25 ஆண்டு கால புரு-ரியாங் பிரச்சினையும் தீர்க்கப்பட்டுள்ளது.. நீண்டநாட்களாக வடகிழக்கின் பல மாநிலங்களில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் அமல்படுத்தப்பட்டு இருந்தது.இருப்பினும், கடந்த 8 ஆண்டுகளில் நிரந்தர அமைதியும், சிறந்த சட்டம் ஒழுங்கு நிலைமையும் வந்ததால், வடகிழக்கின் பல பகுதிகளில் இருந்து இந்த சட்டத்தை நாங்கள் அகற்றியிருக்கிறோம். அனைவரும் இணைவோம்-அனைவரும் உயர்வோம் என்ற உணர்வில் எல்லைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அசாம் - மேகாலயா இடையே ஏற்பட்ட உடன்பாடு மற்றவற்றையும் ஊக்கப்படுத்தும். ஒட்டுமொத்த பிராந்தியத்தின் வளர்ச்சி விருப்பத்திற்கும் இது ஊக்கமளிக்கும்.
அசாம் மக்களின் நேசத்திற்கும், வட்டியுடன் அவர்களுக்கு திரும்ப செலுத்துவேன். இந்த பிராந்தியத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு என்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன்.
***
(Release ID: 1821549)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam