சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயுஷ்மான் பாரத்-சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளன. 2022-ம் ஆண்டு ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சுகாதார அமைச்சகத்தின் முன்னோடித் திட்டமான தொலைமருத்துவ சேவை - “இசஞ்சீவனி” மூலம் 3.5 லட்சம் தொலைமருத்துவ ஆலோசனைகளை பதிவு செய்துள்ளது

Posted On: 28 APR 2022 12:16PM by PIB Chennai

ஆயுஷ்மான் பாரத்-சுகாதாரம் மற்றும் நலவாழ்வு  மையங்கள்தரமான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2022-ம் ஆண்டு ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 27 ஆகிய இரண்டு நாட்களில்மத்திய சுகாதார அமைச்சகத்தின் முன்னோடித் திட்டமான தொலைமருத்துவ சேவை - “இசஞ்சீவனி” மூலம் 3.5 லட்சம் தொலைத்தொடர்பு ஆலோசனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளனஆயுஷ்மான் பாரத் - சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான தொலைமருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது இதுவாகும்இதன் மூலம் நாளொன்றுக்கு 3 லட்சம் தொலைமருத்துவ ஆலோசனைகள்  என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளதுமேலும்ஏப்ரல் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் புரா நோயாளிகளுக்கான  - சஞ்சீவனி - தொலைமருத்துவ சேவை  மூலம் 76 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்.

இத்தகைய சாதனைகள் மூலம் -சஞ்சீவனி தளத்தின் வலுவான தொழில்நுட்பத்திற்கு  சான்றாகும்சுமார் 1 இலட்சம் ஆயுஷ்மான் பாரத் - சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள்  ஏற்கனவே தொலைபேசி அழைப்புகளாக பதிவு செய்து ஆலோசனை வழங்குவதுடன், 25,000-க்கும் மேற்பட்ட மையங்கள் -சஞ்சீவனி இணையத்தளம் வாயிலாக தொலைமருத்துவ சேவைகளையும் வழங்குகின்றனநாடு முழுவதும் சுகாதார சேவைகளை எளிதாக அணுகுவதற்கு உதவுகிறது.

தரமான சுகாதாரப் பாதுகாப்பைப் வழங்குவதில்  தொலைமருத்துவ சேவை மையங்களின்  ஆலோசனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது  அந்தியோதயாவை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாகும்.  இதன் மூலம் நாட்டின் தொலைதூர மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் தரமான மற்றும் குறைந்த செலவில் சுகாதார சேவைகளை பெற முடியும்நாட்டின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு சரியான நேரத்தில் சிறப்பான  சேவைகளை உறுதி செய்வதற்கான வரப்பிரசாதமாக தொலைமருத்துவ சேவைகள் உருவாகியுள்ளன.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820855

 

*******


(Release ID: 1820959) Visitor Counter : 198