பிரதமர் அலுவலகம்
தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழந்தோருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார் பலியானோரின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
27 APR 2022 9:51AM by PIB Chennai
தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையை திரு மோடி அறிவித்துள்ளார்.
தொடர்ச்சியான டுவிட்டர் பதிவுகளில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது;
“தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் ஏற்பட்ட விபத்தால் மிகுந்த துயரம் அடைந்துள்ளேன். சோகமான இந்த தருணத்தில் உறவினர்களை இழந்த குடும்பங்கள் மீது எனது சிந்தனை உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நான் நம்புகிறேன்: பிரதமர்”
“தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்: பிரதமர்”
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1820437)
வருகையாளர் எண்ணிக்கை : 242
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam