பிரதமர் அலுவலகம்
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுக்கள் தொடக்க விழாவையொட்டி பிரதமர் வெளியிட்ட செய்தி
Posted On:
24 APR 2022 7:29PM by PIB Chennai
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுக்கள் தொடக்க விழாவையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது செய்தியை பகிர்ந்துள்ளார். பெங்களூருவில் இந்தப் போட்டிகளை குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு தொடங்கி வைத்தார்.
இந்த விளையாட்டுப் போட்டிகளையொட்டி பிரதமர் வெளியிட்ட செய்தியில், நாட்டின் இளமையான ஆர்வத்தின் அடையாளமாகவும், தொழில்முறை பணியாளர்களின் பெருமிதமாகவும், பெங்களூரு விளங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார். புதிய தொழில்கள் தொடக்கமும். விளையாட்டுப் போட்டிகள் தொடக்கமும் இங்கு ஒரே நேரத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது என்று அவர் கூறியுள்ளார். கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுக்கள் பெங்களூருவில் நடத்தப்படுவது இந்த அழகிய நகரின் சக்தியை அதிகப்படுத்துவதாகும் என்று அவர் தெரிவித்தார்.
வெற்றியின் முதலாவது மந்திரம் குழு உணர்வு என்பதன் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டிய பிரதமர், இது விளையாட்டுக்களிலிருந்து கற்றுக் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த உணர்வு வாழ்க்கை முறையை காண்பதற்கு புதிய வழியையும் காட்டுகிறது. ஆர்வம், சவால்கள், தோல்வியிலிருந்து பாடம் கற்றல், நேர்மை, வாழவதற்கான திறமை போன்று விளையாட்டுகளுக்கும், வாழ்க்கைக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளையும் அவர் கவனத்திற்குக் கொண்டுவந்தார். இப்போது நாட்டில் புதிதாக விளையாட்டு அறிவியல் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. விளையாட்டுக்களுக்கு என்றே அர்ப்பணி்க்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது உங்களின் வசதிக்காகவும், உங்களின் கனவுகள் நனவாகவும், செய்யப்படுகின்றன என்று பிரதமர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819603
*******
(Release ID: 1820218)
Visitor Counter : 167
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam