பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

1919-ல் இதே நாளில் ஜாலியன்வாலாபாகில் உயிர்த்தியாகம் செய்தோருக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்

Posted On: 13 APR 2022 10:22AM by PIB Chennai

1919-ல் இதே நாளில் ஜாலியன்வாலாபாகில் உயிர்த்தியாகம் செய்தோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். புதுப்பிக்கப்பட்ட ஜாலியன்வாலாபாக் நினைவு வளாகத்தின் தொடக்க நிகழ்வில் கடந்த ஆண்டு நிகழ்த்திய உரையையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“1919-ல் இதே நாளில் ஜாலியன்வாலாபாகில் உயிர்த்தியாகம் செய்தோருக்கு அஞ்சலி. இவர்களின் இணையற்ற துணிவும், தியாகமும் வரும் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும். புதுப்பிக்கப்பட்ட ஜாலியன்வாலாபாக் நினைவு வளாகத்தின் தொடக்க நிகழ்வில் கடந்த ஆண்டு நிகழ்த்திய எனது உரையைப் பகிர்ந்துள்ளேன். https://t.co/zjqdqoD0q2"

***************


(Release ID: 1816290) Visitor Counter : 207