பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராம நவமியை முன்னிட்டு ஜூனாகத், கதிலாவில் உள்ள உமியா மாதா கோவிலின் 14-வது நிறுவன தின விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்

प्रविष्टि तिथि: 09 APR 2022 4:16PM by PIB Chennai

ராம நவமியை முன்னிட்டு,  குஜராத்தில் உள்ள கதிலாவில் அமைந்திருக்கும் உமியா மாதா கோவிலின் 14-வது நிறுவன தின விழாவில் 2022-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி மதியம் 1 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றுகிறார்.

 

2008-ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தபோது, பிரதமர் திரு நரேந்திர மோடியால் இந்தக் கோவிலின் திறப்பு விழா நடைபெற்றது. 2008-ல் அவர் வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில், பல்வேறு சமூக மற்றும் சுகாதாரம் தொடர்பான செயல்பாடுகளிலும், இலவச கண்புரை அறுவை சிகிச்சைகள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த நோயாளிகளுக்கு இலவச ஆயுர்வேத மருந்துகள் போன்றவற்றிலும் கோவில் அறக்கட்டளை தனது நோக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது.

 

கடவா பதிதார்களின் குல தெய்வமாக உமியா அன்னை கருதப்படுகிறார்.

 

***********


(रिलीज़ आईडी: 1815206) आगंतुक पटल : 204
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam