பிரதமர் அலுவலகம்
உக்ரைன் விவகாரம் மற்றும் ஆபரேசன் கங்கா குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஆரோக்கியமான விவாதத்திற்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
06 APR 2022 8:30PM by PIB Chennai
நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களில், உக்ரைன் விவகாரம் மற்றும் ஆபரேசன் கங்கா குறித்து நடைபெற்ற ஆரோக்கியமான விவாதத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த விவாதத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்கள் மூலம் அதனைச் செழுமைப்படுத்திய அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். மோசமான சூழலில் இருந்த நமது நாட்டு குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு பற்றி கவனம் செலுத்துவது நமது கூட்டு பொறுப்பு என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது;
‘’ கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் உக்ரைன் நிலவரம், ஆபரேசன் கங்கா மூலம் நமது குடிமக்களை திரும்ப கொண்டு வர மேற்கொண்ட ஆபரேசன் கங்கா பற்றி ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றுள்ளது. இந்த விவாதத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்கள் மூலம் அதனைச் செழுமைப்படுத்திய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி.
‘’ மோசமான சூழலில் இருந்த நமது நாட்டு குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு பற்றி கவனம் செலுத்துவது நமது கூட்டு பொறுப்பு. நமது குடிமக்கள் எந்தவித சிக்கலையும் சந்திக்கக்கூடாது என்ற விதத்தில் மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.’’
************
(रिलीज़ आईडी: 1815178)
आगंतुक पटल : 231
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam