பிரதமர் அலுவலகம்
குஜராத் அம்பாஜி தீர்த்தத்தில் ஒலி,ஒளிக் காட்சியில் பங்கேற்குமாறு பக்தர்களுக்குப் பிரதமர் வேண்டுகோள்
Posted On:
08 APR 2022 1:59PM by PIB Chennai
குஜராத் அம்பாஜி தீர்த்தத்தில் ஒலி,ஒளிக் காட்சியில் பங்கேற்குமாறு பக்தர்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 51 சக்தி பீடங்களில் பரிக்கிரமா திருவிழா இன்று 7 மணி முதல் தொடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். ஒலி,ஒளிக் காட்சியில் நமது புராணங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"குஜராத் மாநிலம் அம்பாஜி தீர்த்தத்தில் பக்தர்களுக்கு மிகவும் மங்களகரமான தருணம் வந்துள்ளது. இன்று மாலை 7 மணி முதல், 51 சக்திபீடங்களின் பரிக்கிரமா திருவிழா இங்கு தொடங்குகிறது. இதில் நமது புராணங்களின் கண்கவர் விளக்கத்துடன் கூடிய ஒளி, ஒலி காட்சியும் அடங்கும். இந்த மாபெரும் நிகழ்ச்சியில் நீங்கள் அனைவரும் பங்கு பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்"
***
(Release ID: 1814783)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam