தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (ஏவிஜிசி) துறையின் ஊக்குவிப்புக்கான பணிக்குழுவை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அமைத்துள்ளது
Posted On:
08 APR 2022 10:46AM by PIB Chennai
* ‘கிரியேட் இன் இந்தியா’ மற்றும் ‘பிராண்ட் இந்தியா’ ஆகியவற்றை உலகெங்கும் பறைசாற்றும் திறனை இந்தியாவின் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக் (ஏவிஜி) துறை கொண்டுள்ளது. சுமார் 25-30% ஆண்டு வளர்ச்சியுடன், ஆண்டுதோறும் 1,60,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், 2025-ம் ஆண்டுக்குள் சர்வதேச சந்தைப் பங்கில் 5%-ஐ (~$40 பில்லியன்) கைப்பற்றும் திறனை இந்தியா கொண்டுள்ளது.
* ஏவிஜிசி துறையின் திறனை மேலும் மேம்படுத்த, 2022-23 மத்திய பட்ஜெட்டில் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் ஊக்குவிப்பு பணிக்குழுவை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. நமது சந்தைகள் மற்றும் உலகளாவிய தேவைக்கு சேவையாற்றுவதற்கான திறன் வளர்ப்புக்கான வழிகளை பரிந்துரைக்க இக்குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
* 2022-23 மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, நாட்டில் ஏவிஜிசி துறையை மேம்படுத்த அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் ஊக்குவிப்பு பணிக்குழு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
* தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளரால் வழிநடத்தப்படும் ஊக்குவிப்பு பணிக்குழு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்;
கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை;
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை ஆகியவற்றின் செயலாளர்களைக் கொண்டிருக்கும்.
* தொழில்துறை பங்குதாரர்களின் பரவலான பங்கேற்பை கீழ்கண்டவாறு இது கொண்டிருக்கும்:
பீரன் கோஷ், தலைவர், டெக்னிக் கலர் இந்தியா;
ஆஷிஷ் குல்கர்னி, நிறுவனர், புனர்யுக் ஆர்ட்விஷன் பிரைவேட் லிமிடெட்
ஜேஷ் கிருஷ்ண மூர்த்தி, நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, அனிபிரைன்
கீதன் யாதவ், தலைமை செயல்பாட்டு அதிகாரி மற்றும் விஎஃப்எக்ஸ் தயாரிப்பாளர், ரெட்சில்லீஸ் விஎஃப்எக்ஸ்
சைதன்யா சின்ச்லிகர், தலைமை தொழில்நுட்ப அதிகாரி, விசில் வூட்ஸ் இன்டர்நேஷனல்
கிஷோர் கிச்சிலி, மூத்த துணைத் தலைவர் மற்றும் தலைவர், ஜிங்கா இந்தியா
நீரஜ் ராய், ஹங்காமா டிஜிட்டல் மீடியா என்டர்டெயின்மென்ட்டின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி.
* கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா மாநில அரசுகள்; அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் போன்ற கல்வி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் எம்ஈஎஸ்சி, ஃபிக்கி மற்றும் சிஐஐ போன்ற தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஊக்குவிப்பு பணிக்குழுவில் இடம்பெறுவார்கள்.
* இந்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் முக்கிய தொழில்துறை நிறுவனங்களின் பங்கேற்புடன் ஏவிஜிசி ஊக்குவிப்பு பணிக்குழுவை உருவாக்கும் நடவடிக்கை, இந்தத் துறைக்கான வளர்ச்சிக் கொள்கைகளை வழிநடத்துவதற்கான அமைப்புரீதியான முயற்சிகள் மற்றும் தரநிலைகளை நிறுவுவதன் மூலம் துறையின் வளர்ச்சி மீது கவனம் செலுத்தும். இந்தியாவில் ஏவிஜிசி கல்விக்காக தொழில்துறை மற்றும் சர்வதேச ஏவிஜிசி நிறுவனங்களுடன் தீவிரமாக ஒத்துழைத்து, இந்திய ஏவிஜிசி தொழில்துறையின் உலகளாவிய நிலையை இது மேம்படுத்தும்
பணிக்குழுவின் குறிப்பு விதிமுறைகளில் பின்வருவன அடங்கும்:.
(i) தேசிய ஏவிஜிசி கொள்கையை உருவாக்குதல்,
(ii) ஏவிஜிசி தொடர்பான துறைகளில் பட்டப்படிப்பு, முதுகலை மற்றும் முனைவர் படிப்புகளுக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை பரிந்துரைத்தல்,
(iii) கல்வி நிறுவனங்கள், தொழில் பயிற்சி மையங்கள் மற்றும் தொழில்துறையுடன் இணைந்து திறன் முயற்சிகளை எளிதாக்குதல்,
(iv) வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது,
(v) இந்திய ஏவிஜிசி தொழில்துறையின் உலகளாவிய வரம்பை விரிவுபடுத்துவதற்கான ஊக்குவிப்பு மற்றும் சந்தை மேம்பாட்டு நடவடிக்கைகளை எளிதாக்குதல்,
(vi) ஏவிஜிசி துறையில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்காக ஏற்றுமதியை மேம்படுத்துதல் மற்றும் ஊக்குவிப்புகளை பரிந்துரைத்தல்,
* ஏவிஜிசி ஊக்குவிப்பு பணிக்குழு அதன் முதல் செயல் திட்டத்தை 90 நாட்களுக்குள் சமர்ப்பிக்கும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814698
******
(Release ID: 1814768)
Visitor Counter : 261
Read this release in:
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam