நிதி அமைச்சகம்
2022 மார்ச்சில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இது வரை இல்லாத அளவில் ஜிஎஸ்டி வசூல்
Posted On:
01 APR 2022 3:33PM by PIB Chennai
மார்ச் 2022-ல் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ 1,42,095 கோடி ஆகும். இதில் மத்திய வரி (சிஜிஎஸ்டி) ரூ 25,830 கோடி, மாநில வரி (எஸ்ஜிஎஸ்டி) ரூ 32,378 கோடி, ஒருங்கிணைந்த வரி (ஐஜிஎஸ்டி) ரூ 74,470 கோடி (பொருட்களின் இறக்குமதியில் வசூலான ரூ 39,131 கோடி உட்பட) செஸ் ரூ 9,417 கோடி (பொருட்களின் இறக்குமதியில் வசூலான ரூ 981 கோடி உட்பட) ஆகும்.
மார்ச் 2022-ல் மொத்த ஜிஎஸ்டி வசூல், ஜனவரி 2022ல் வசூலான ரூ 1,40,986 கோடி என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
ஐஜிஎஸ்டியிலிருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ 29,816 கோடியையும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ 25,032 கோடியையும் அரசு வழங்கியுள்ளது. மேலும், மத்திய மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இடையே 50:50 என்ற விகிதத்தில் தற்காலிக அடிப்படையில் ரூ 20,000 கோடி ஐஜிஎஸ்டியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
2022 மார்ச்சுக்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி வருவாயை விட 15% அதிகமாகவும், 2020 மார்ச் ஜிஎஸ்டி வருவாயை விட 46% அதிகமாகவும் உள்ளது.
தமிழ்நாட்டில் 2021 மார்ச்சில் ரூ 1,828 கோடியக இருந்த ஜிஎஸ்டி வருவாய், 2022 மார்ச்சில் ரூ 2,089 கோடியாக அதிகமாகி 14 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1812315
***************
(Release ID: 1812521)
Visitor Counter : 1895